அன்னபூரணியின் பின்னணியில் தி.க.. கொளுத்திபோட்ட இந்து மக்கள் கட்சி..

Published : Dec 28, 2021, 11:29 AM ISTUpdated : Dec 28, 2021, 11:32 AM IST
அன்னபூரணியின் பின்னணியில் தி.க.. கொளுத்திபோட்ட இந்து மக்கள் கட்சி..

சுருக்கம்

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் காவல்துறைக்கு புகார் கொடுக்க இருக்கிறோம். ஆனால் அன்னபூரணி விவகாரத்தில் இத்தனை அக்கறை காட்டும் ஊடகங்கள் இது இஸ்லாமிய கிறிஸ்தவ நிறுவனங்களில் நடக்கும் விஷயங்களை விவாதிக்க, வெளிச்சத்திற்கு கொண்டுவர தயங்குகின்றன. 

செங்கல்பட்டில் எழுந்தருளியுள்ள அன்னபூரணியின் பின்னணியில்  திராவிடர் கழகம் இருப்பதாக தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இந்து மதத்தைப் வேண்டுமென்றே கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக அன்னபூரணியை இஸ்லாமிய அல்லது கிருத்துவ மிஷினரிகள் களம் இறங்கியுள்ளார்களா என்பது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி செந்தில் கூறியுள்ளார்.

காய்கறி பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஒமைக்ரான் பரவல் என அத்தனை பரபரப்பு செய்திகளையும் அடித்து ஓட விட்டிருக்கிறது அன்னபூரணி அரசு அம்மா போலி சாமியார் விவகாரம். சமூக வலைதளத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது ஆதிபராசக்தி அரசு அன்னபூரணி அரசு அம்மா என்னும் பெண் சாமியார் தான். தன்னை ஆதிபராசக்தி என்றும் தனது கள்ளக்காதலனுடன் இறந்த ஆவி தனக்குள் புகுந்து அனைவருக்கும் அருள்வாக்கு சொல்லி வருகிறது என்றும் தனக்குள் அபரிதமான சக்தி மறைந்து இருப்பதாகவும் பகீர் கிளப்பி வருகிறார் அன்னபூரணி. செங்கல்பட்டில் எழுந்தருளி இருப்பதாக தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி, தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என்றும் அறிவித்துள்ளார். செங்கல்பட்டில் வரும் புத்தாண்டு 1 அன்று மக்களுக்கு அருள்வாக்கு வழங்கப் போவதாகவும் அறிவித்து, போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. பலரும் யாரிந்த அன்னபூரணி என கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்த கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு தனது எதிர்வீட்டில் வசித்த லட்சுமி என்ற பெண்ணிக் கணவர் அரசு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அதற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் பஞ்சாயத்துக்கு வந்தவர்தான் அன்னபூர்ணி.

 கள்ளக்காதலுக்காக தான் கட்டிய கணவனையும், குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு வேறொரு எதிர் வீட்டு பெண்ணின் கணவர் அரசு என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர் தான் இந்த அன்னபூரணி. சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் நீ செய்வது தவறு, இன்னொரு பெண்ணின் கணவனுடன் தொடர்பில் இருப்பது தவறு என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த அன்னபூர்ணிக்கு எவ்வளவோ படித்து படித்து சொல்லியும், முடியவே முடியாது வாழ்ந்தால் அரசுவுடன்தான் வாழ்வேன் என அடுத்தவரின் கணவனை ஆட்டயப்போட்டவர்தான் இந்த அன்னபூர்ணி. 

இப்படிப்பட்ட அன்னபூரணி திடீரென அம்மனாக அவதாரம் எடுத்துள்ளதாகவும், மக்களுக்கு அருள்வாக்கு கூறி வருவது போன்ற வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கள்ள கணவன் அரசுவுடன் இணைந்து செங்கல்பட்டில் சிறிய அளவில் மடம் ஒன்றை ஆரம்பித்துள்ள இவர். அடிக்கடி கல்யாண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து பக்தர்களுக்கு அருள்வாக்கும் வழங்கி வருகிறார். அவரை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து அருள்வாக்கு வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் எல்லா மூலைகளில் இருந்தும் மக்கள் அன்னபூரணியை தேடி வருகின்றனர். பல தீராத நோய்களுடன் வந்து அன்னபூரணியிடம் அருள்வாக்கு பெற்றுச் செல்கின்றனர், அப்படி அருள் வாக்கு பெற்றதால் தீராத நோய்களெல்லாம் இருந்ததாகவும் பக்தர்கள் கூறிவருகின்றனர். 

சொல்வதெல்லாம் பஞ்சாயத்தை அறிந்த பலரும், இது போன்ற போலி சாமியார்களை உடனே தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்த கோரிக்கையின் எதிரோலியாக அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். தான் ஏராகூடமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்த ஆன்னபூரணி தனது செல்போனை அணைத்து வைத்து தலைமறைவாகி விட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, நான் ஓடி ஒளிந்து விட்டதாக வதந்தி பரவுகிறது. அதனால் நேரடியாக வந்திருக்கிறேன். நான் இதுவரை என்னை சாமி என்றோ ஆதிபராசக்தி என்று கூறவில்லை. யாரிடமும் என்னை நம்புங்கள், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் பேசவில்லை. என்னை பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது. அது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படுகிற ஒரு உணர்வு. அப்படித்தான் மக்கள் என்னை நாடி வருகின்றனர். ஆனால் அந்த உணர்வை பலர் கொச்சைப் படுத்துகின்றனர். எனக்குள் இருக்கும் சக்தியை புரிந்து கொள்ளாமல் என்னை அவமானப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றெல்லாம் கூறியுள்ளார். 

இவரை குறித்து பலரும் பல வகையில் கருத்து கூறிவருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள. இந்து மக்கள் கட்யின் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில், அன்னபூரணியின் விவகாரம் குறித்து எங்களது அமைப்பை சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். யார் இந்த அன்னபூரணி? அவரின் பின்னணி என்ன? அவர் எங்கு பிறந்தார் அவர் எப்படி சாமியாராக மாறினார் என பல கோணங்களில் விசாரித்து வருகிறோம்? இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான முழு விவரங்களுடன் நாங்கள் செய்தியாளர்களை சந்திப்போம். இந்து மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாராவது செயல்பட்டால் அதை இந்து மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. அந்த வகையில் அன்னபூரணியின் நோக்கம் என்ன என்பதை ஆராய்ந்து வருகிறோம். இவரின் பின்னணியில்  திராவிடர் கழகம்  இருக்கக் கூடுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. ஏனென்றால் இந்து மதத்தை அவமதிக்க வேண்டும் என்பதற்காக அவரின் பின்னால் யாரேனும் செயல்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இஸ்லாமிய அல்லது கிறிஸ்துவ மிஷனரிகள் அன்னபூரணியின் பின்னணியில் இருக்கிறார்களா என்பது குறித்து தமிழக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் காவல்துறைக்கு புகார் கொடுக்க இருக்கிறோம். ஆனால் அன்னபூரணி விவகாரத்தில் இத்தனை அக்கறை காட்டும் ஊடகங்கள் இது இஸ்லாமிய கிறிஸ்தவ நிறுவனங்களில் நடக்கும் விஷயங்களை விவாதிக்க, வெளிச்சத்திற்கு கொண்டுவர தயங்குகின்றன. பணம் சம்பாதிக்கும் நோக்கில் அன்னபூரணி வந்திருக்கிறாரா? அல்லது இந்து மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் வந்திருக்கிறாரா? என்பது இன்னும் ஒருசில தினங்களில் அம்பலப்படுத்துவோம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஸ்தலம் மதமாற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்துமதத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது, அதற்கு போட்டியாக இவர் வந்திருக்கிறாரா என்பது ஆராயப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?