அரசுகளைக் கவிழ்ப்பதை விடுங்க... முதல்ல பெட்ரோல் விலையைக் குறைங்க... பிரதமர் மோடிக்கு ராகுல் அட்வைஸ்!

By Asianet TamilFirst Published Mar 11, 2020, 10:13 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியிலிருந்து 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள அரசை கவிழ்த்த அதே பாணியில் மத்திய பிரதேசத்திலும் பாஜக செயல்பட்டுவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.
 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதை விட்டுவிட்டு பெட்ரோல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அட்வைஸ் செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக கமல்நாத் இருந்துவருகிறார். மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்துவரும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் கமல்நாத்துக்கும் பனிப்போர் நிலவி வந்தது. இதனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த சிந்தியா, திடீரென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜகவில் இணையப்போவதாகவும் சிந்தியா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக கமல்நாத் இருந்துவருகிறார். மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்துவரும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் கமல்நாத்துக்கும் பனிப்போர் நிலவி வந்தது. இதனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த சிந்தியா, திடீரென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜகவில் இணையப்போவதாகவும் சிந்தியா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள அரசை கவிழ்த்த அதே பாணியில் மத்திய பிரதேசத்திலும் பாஜக செயல்பட்டுவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.


இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் பதில் அளித்துள்ளார். அதில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதில் நீங்கள் தீவிரமாகச் செயல்படுகிறீர்கள். அதேவேளையில், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் சரிந்துள்ளது. இதை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். இந்நிலையில் பெட்ரோல் விலையை 60 ரூபாய்க்கு கீழே குறைத்தால் மக்கள் பயனடைவார்கள். அதற்கு முயற்சி எதுவும் எடுப்பீர்களா?” என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!