அராஜகம் பன்றாங்க…. நாம் தமிழர் கட்சிக்கு தடைவிதிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்த காங்கிரஸ்…!

By manimegalai aFirst Published Oct 12, 2021, 6:52 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஈழத்தமிழர்கள் இன அழிப்பு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ்தான் முக்கிய காரணம் என கட்சி தொடங்கிய நாளில் இருந்தே சீமான் முழங்கி வருகிறார். அவரது தம்பிகளும் எப்போதும் காங்கிரஸ்-க்கு எதிராக அனலை கக்கி வருகின்றனர். சீமான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது பதில் கொடுத்தாலும், அவரை பெரிதாக எதிர்த்தது கிடையாது.

ஆனால், சமீபத்திய நாட்களாக காங்கிரஸ் – நாம் தமிழர் கட்சி இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இருதரப்பிலும் தினமும் வார்த்தை யுத்தம் நடக்கிறது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை மிகவும் கீழ்த்தரமாக சீமான் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் பலகட்டங்களில் உள்ள தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு சீமான் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்படுவதால் இப்பிரச்சனை புகைந்துகொண்டே உள்ளது.

இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் பொங்கி எழுந்துள்ளனர். இதுதொடர்பாக, தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை செயலாளர் கனகராஜ், நாம் தமிழர் கட்சி துவங்கிய காலத்திலிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியை அநாகரிகமாக பேசிவருவதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நாம் தமிழர் கட்சியை முடக்கி, கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மாநில தேர்தல் ஆணையத்தின் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கியதாக கனகராஜ் கூறினார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தையும் நாட உள்ளதாக அவர் கூறினார். உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

click me!