காங்கிரஸ் கமிட்டியா இல்லை கமிஷன் கமிட்டியா? சத்தியமூர்த்தி பவனில் முக்கிய எம்.பி தர்ணா.. பரபரப்பு.

Published : Mar 13, 2021, 01:54 PM ISTUpdated : Mar 13, 2021, 01:57 PM IST
காங்கிரஸ் கமிட்டியா இல்லை கமிஷன் கமிட்டியா?    சத்தியமூர்த்தி பவனில் முக்கிய எம்.பி தர்ணா.. பரபரப்பு.

சுருக்கம்

ராகுல் காந்திபிரசாரத்தில் சிந்திய ரத்த வியர்வையால் காங்கிரஸ் கட்சி வளர்கிறது. ஆனால் கட்சி வேட்பாளர் தேர்வில் இவர்கள் குதிரை பேரம் நடத்துகிறார்கள். 

காங்கிரஸ் கமிட்டியா இல்லை கமிஷன் கமிட்டியா? என எம்.பி விஷ்ணு பிரசாத் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், செயல் தலைவர் என்ற முறையில் என்னிடம் வேட்பாளர் தேர்வு செய்வது பற்றி விவாதிக்கவில்லை. 

ராகுல் காந்திபிரசாரத்தில் சிந்திய ரத்த வியர்வையால் காங்கிரஸ் கட்சி வளர்கிறது. ஆனால் கட்சி வேட்பாளர் தேர்வில் இவர்கள் குதிரை பேரம் நடத்துகிறார்கள். பாஜக மிரட்டி ஆட்சி பிடிக்கின்ற நிலையில் நம்பிக்கையையானா நபர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் கட்சியில் வேலை செய்யாத தங்கள் பிள்ளைகளுக்கு சீட் கேக்கின்றனர்.

எனவே இது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியா? அல்லது கார்ப்பரேட் கமிட்டியா? என எனக்கு தெரியவில்லை என்றார். பின்னர் தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நடத்திய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு ஆலோசனை கூட்டத்தில் என்னை அனுமதிக்கவில்லை எனவும், நேற்று முன் தினம் தயாரான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளது எனவும் கூறினார். இதனால் சத்திய மூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

TVK Vijay Game: முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா?!
அரசியல் சாணக்கியரை வளைத்துப் போட்ட விஜய்..! தைலாபுரத்தில் முடிவாகும் தவெக, பாமக கூட்டணி..?