காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு... தேனியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சீட்டு..!

Published : Mar 23, 2019, 06:20 AM ISTUpdated : Mar 23, 2019, 06:22 AM IST
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு... தேனியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சீட்டு..!

சுருக்கம்

இழுபறியாக நீடித்துகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேனியில் களமிறக்கப்பட்டுள்ளார்.  

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்துவந்தது. இந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்து இழுபறி நீடிப்பதால் தாமதம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு டெல்லி தலைமை வெளியிட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:
கிருஷ்ணகிரி -  டாக்டர் ஏ.செல்லகுமார்
திருவள்ளூர்  - டாக்டர் கே.ஜெயக்குமார்
ஆரணி - எம்.கே.விஷ்ணு பிரசாத்
கரூர் - ஜோதிமணி
திருச்சி - சு.திருநாவுக்கரசர்
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
கன்னியாகுமரி - ஹெச்.வசந்தகுமார்
தேனி-  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
புதுவை - வைத்தியலிங்கம்


சிவகங்கை தொகுதியில் மட்டும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அங்கே போட்டியிட சிதம்பரம் குடும்பத்தினரும் சுதர்சன நாச்சியப்பனும் போட்டியிட போட்டிப்போடுகிறார்கள். எனவே அந்தத் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல நாங்குனேரி எம்.எல்.ஏ.வாக இருக்கும் வசந்தகுமார் கன்னியாகுமரியில் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில்  கன்னியாகுமரியில் போட்டியிட்டார். கிருஷ்ணகிரி அல்லது விருதுநகர்  தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேனி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!