தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டிருப்பது காங்கிரஸ் அரசு தான் – தமிழிசை

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 01:17 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டிருப்பது காங்கிரஸ் அரசு தான் – தமிழிசை

சுருக்கம்

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு செய்து கொண்டிருப்பது கர்நாடக காங்கிரஸ் அரசு தான் என பாஜக மாநில தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பா.ஜனதா கட்சி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

அதேபோல், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதிலும் பா.ஜனதா கட்சி உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

பிரதமரையும், அமைச்சர்களையும் சந்திக்க உள்ளோம். இதற்காக மாநில தலைவராகிய தானும் மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த குழு, காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி அதனை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

கர்நாடகாவை ஆள்வது காங்கிரஸ் என்ற வகையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துக்கொண்டிருப்பது காங்கிரஸ் என்பதை உணர்ந்து அந்த கட்சியும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டிருப்பது தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு தான். இதை உணர்ந்து கொள்ளாமல், தா.பாண்டியன் போன்றவர்கள் மிகத்தவறான பிரசாரத்தை மேற்கொள்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அக்கறையோடும், பொறுப்புணர்வோடும் செயல்படும் மத்திய அரசை அடியோடு கடுமையாக விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும்,நிச்சயமாக காவிரி தண்ணீர் பெற்றுத்தருவதில் நியாயமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டியதை கிடைக்க அத்தனை முயற்சிகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என தமிழை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TVK vs ADMK: விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.! என்ன செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி
AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்