அப்போலோ சென்று அரசியல் லாபம் தேட விரும்பவில்லை - திருநாவுக்கரசர் பேட்டி

Asianet News Tamil  
Published : Oct 06, 2016, 05:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
அப்போலோ சென்று அரசியல் லாபம் தேட விரும்பவில்லை - திருநாவுக்கரசர் பேட்டி

சுருக்கம்

அப்போலோ சென்று முதலமைச்சரை சென்று சந்தித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் சென்னை  சத்திய மூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் அப்போது அவர் கூறியதாவது.

உள்ளாட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை பல விஷயங்கள் மீரப்பட்டது. இதன் விளைவே தேர்தலை அவகாசம் எடுத்து பிரச்சனைக்குரிய விஷயங்களை கலைந்து டிசம்பர் 30 க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

முதல்வரை சந்திக்க எதிர்கட்சித்தலைவர்கள் செல்கிறார்கள் நீங்கள் ஏன் செல்லவில்லை என்று கேட்கிறீர்கள் அவர் பூரண நலம் அடைந்து விரைவில் வழக்கமான  பணியில் ஈடு படவேண்டும் என்று விரும்புகிறேன், அதே வேலையில்  அரசியல் லாபத்திற்காகவோ ,சுய விளம்பரத்திற்காகவோ சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சரை சந்திக்க விரும்பவில்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!