தயாராகிறது அறை எண் 3001 – 3005 : அப்பல்லோ ஏற்பாடுகள்..!!!

Asianet News Tamil  
Published : Oct 06, 2016, 05:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
தயாராகிறது அறை எண் 3001 – 3005 : அப்பல்லோ ஏற்பாடுகள்..!!!

சுருக்கம்

சி.சி.யு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே அளித்த சிகிச்சையை தொடர்ந்து படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இன்று ரிச்சர்ட் பீலேவுடன் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் ஆலோசனை வழங்குவதற்காக அப்பல்லோ வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நரையீரல் சுவாசத்தின்போது ஆக்ஸிஜன் அளவு சரியாக இல்லாத நிலை காணப்பட்டதாகவும், ஆனால் தற்போது அந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, நேற்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முதலமைச்சர் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது.

தற்போது கிரிட்டிக்கெல் கேர் யூனிட் எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது 2-வது தளத்தில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் உள்ள அறை எண் 3002 - க்கு வெகு விரைவில் மாற்ற உள்ளதாகவும், அந்த அறையை சுற்றியுள்ள 3001, 3003, 3004, 3005 ஆகிய எண்கள் கொண்ட அறைகள் மருத்துவமனை சார்பில் முதலமைச்சருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

PREV
click me!

Recommended Stories

TN AGRI BUDGET: திராவிட கட்சிகள் செய்யாததை செய்தாரா விஜய்?! முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!
Tamil Nadu Agri Budget: இனி தடையில்லா விவசாயம் சாத்தியம்..! இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு..!