காங்கிரஸ் போற ரூட்டு நாகரிகமா இல்ல! அவ்ளோதான் சொல்லுவோம்!: மிரட்டும் தி.மு.க.?

By Vishnu PriyaFirst Published Jan 13, 2020, 5:46 PM IST
Highlights

தமிழக காங்கிரஸ் என்ன சாதித்துவிட்டது என்று எங்களை நெருக்குகிறார்கள்? கடந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றி, எங்கள் தலைவரின் மூலமாக வந்ததுதான். ராகுலுக்காக மக்கள் வாக்களித்திருந்தால், ஏன் தேசிய அளவில் காங்கிரஸ் தோற்கிறது? எனவே ஸ்டாலினின் முகத்தால்தான் இந்த கூட்டணி பிழைத்திருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் ஸ்டாலின் அவர்களின் முகத்துக்குதான் ஓட்டு விழப்போகிறது. இது இப்படியிருக்க, இவர்கள் எங்களை ஓவராக டார்ச்சர் செய்வதுதான் கூட்டணி தர்மத்துக்கு எதிரானது.’ என்று வெளுத்துவிட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் செயல் கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது, பெரும் வேதனையளிக்கிறது!...என்று தமிழக காங்கிரஸ் வெளிப்படையான அறிக்கையை தட்டிவிட்டிருப்பது, தி.மு.க.வின் கூட்ட்ணிக்குள் களேபரம் கொடிகட்ட துவங்கிவிட்டதைக் காட்டுகிறது. சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, தனது மகனுக்கு மாவட்ட கவுன்சிலர் பதவியை கேட்டிருந்தார். ஆனால் அது கிடைக்கவில்ல. அதுமட்டுமல்ல இருபத்து ஏழு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு தலைவர் பதவியோ  அல்லது துணைத் தலைவர் பதவியோ கூட காங்கிரஸுக்கு வழங்காமல் வைத்திருந்தது தி.மு.க. அதனாலும், முந்நூற்று மூன்று ஒன்றியத் தலைவர் பதவிகளில் வெறும் இரண்டை மட்டுமே காங்கிரஸுக்கு கொடுத்திருந்தது. இப்படி தங்களை மிக அவமரியாதை படுத்தி, வெச்சு செய்ததால்தான் மாநில காங்கிரஸ் அந்த சூடான அறிக்கையை வெளியிட்டது.


அடக்குமுறைக்கு எதிராக உரிமைப்போராட்டம் நடத்திட சொல்லி மக்களைத் தூண்டும் தி.மு.க.வோ, காங்கிரஸின் இந்த உரிமை அறிக்கையை கண்டு கொதித்துவிட்டது. அந்தந்த மாவட்டங்களில் காங்கிரஸ் தலைவர்களை தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் வறுத்தெடுத்துவிட்டனர். இது போதாதென்று ’தமிழக காங்கிரஸ் என்ன சாதித்துவிட்டது என்று எங்களை நெருக்குகிறார்கள்? கடந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றி, எங்கள் தலைவரின் மூலமாக வந்ததுதான். ராகுலுக்காக மக்கள் வாக்களித்திருந்தால், ஏன் தேசிய அளவில் காங்கிரஸ் தோற்கிறது? எனவே ஸ்டாலினின் முகத்தால்தான் இந்த கூட்டணி பிழைத்திருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் ஸ்டாலின் அவர்களின் முகத்துக்குதான் ஓட்டு விழப்போகிறது. இது இப்படியிருக்க, இவர்கள் எங்களை ஓவராக டார்ச்சர் செய்வதுதான் கூட்டணி தர்மத்துக்கு எதிரானது.’ என்று வெளுத்துவிட்டனர். காங்கிரஸ் தரப்புக்கு இது மிகப்பெரிய மன வேதனையை தந்திருக்கிறது. தி.மு.க.வுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜனோ “நான் அன்று எந்த உரிமைக்காக போராடினேனோ அதே உரிமைக்காகத்தான் இன்று கே.எஸ்.அழகிரி குரல் கொடுக்கிறார். ஆனால் என்னை சஸ்பெண்ட் செய்துவிட்டனர்! என்ன செய்ய? தன் மகனை மாவட்ட கவுன்சிலர் ஆக்க முடியாததால், ராமசாமி கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படியானால் ராமசாமி மீது நடவடிக்கை எடுப்பாரா அழகிரி?” என்று இந்த பஞ்சாயத்தோடு சேர்த்து, தன் பிரச்னையையும் பேசியிருக்கிறார். 


ஆனாலும் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் விளைவிப்பதாக கடுப்பாகிறது. சென்னையை சேர்ந்தவரான தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் “ கூட்டணியில் சிக்கல் என்றால் எங்கள் தலைவர் ஸ்டாலினிடம் மனம் விட்டுப் பேசியிருக்க வேண்டும். அதை விட்டு, இப்படி வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவது கூட்டணி தர்மமா? காங்கிரஸ் தலைவர் அழகிரியின் வெளிப்படையான அறிக்கை நல்லதல்ல.” என்று பொளேரென அடித்திருக்கிறார் நெத்தியடியாக. 
தி.மு.க.வின் இந்த கோபத்துக்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடு தூக்கும்! என்று எதிர்பார்த்தால், அதுவோ பம்ம துவங்கியுள்ளது. காரணம், தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறினால், அவர்கள் எங்கு சென்று என்ன சாதிக்க முடியும்?
பொழப்பு முக்கியம் அமைச்சரே!

'மாவீரன் பிரபாகரனின்' முதல் பிறந்தநாள்..! உற்சாகமாக கொண்டாடிய சீமான் குடும்பம்..!

click me!