சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் - மார்ச் 23 ஆம் தேதி வாக்கெடுப்பு...

Asianet News Tamil  
Published : Mar 20, 2017, 07:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் - மார்ச் 23 ஆம் தேதி வாக்கெடுப்பு...

சுருக்கம்

Confidence motion against the Speaker - a referendum on March 23

சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தமிழக சட்டமன்றத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றனர்.

பொதுச்செயலாளர் ஆன போதே சசிகலா ஜெயலலிதாவை போன்று உடை அணிவதும், போட்டு அணிவதும், மோதிரம் அணிவதும், செருப்பு அணிவதும், ஜெயலலிதா காரில் செல்வதும் என ஓவர் சல்லையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து ஒ.பி.எஸ்ஸின் பதவியை பறிக்க முயன்றார். ஒ.பி.எஸ்ஸை பதவி விலகவும் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார்.

எனவே அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டதால் சிறைக்குச் சென்றார்.

இந்நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலை அளித்தமையால், எடப்பாடி முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆனால் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். அதன்படி பெரும்பான்மையை நிரூபிக்க  சட்டமன்றத்தை கூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.

அதில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தும்படி திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், சட்டமன்ற அவைக் காவலர்களால் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனால் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சபாநாயகர் ஒருதலைபட்சமாக வாக்கெடுப்பு நடத்த எடப்பாடிக்கு உதவியதாக மு.க.ஸ்டாலின் கிழிந்த சட்டையோடு ஆளுநர் வித்யாசரிடம் நேரில் சென்று குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக முடிவு செய்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான கடிதத்தை சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் வழங்கப்பட்டது.

 இந்நிலையில், சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் மார்ச் 23-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நேரு குடும்பத்தில் டும் டும் டும்.. காதலியை கரம் பிடிக்கும் பிரியங்கா காந்தி மகன்.. யார் இந்த அவிவா பெய்க்?
இபிஎஸ் பேசும்போது அதிர்ச்சி.. பக்கத்தில் மயங்கி சரிந்த மா.செயலாளர்.. பதறிய தொண்டர்கள்.. என்ன நடந்தது?