
ஒ.பி.எஸ்க்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் 6 ஆயிரம் பேர் கொண்ட பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் ஒ.பி.எஸ் அணியினர் தாக்கல் செய்துள்ளனர். மேலும் 60 லட்சம் பேர் உறுதிபத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்து செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பாளர்களை தமிழக அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்ய ரெடியாகி கொண்டு வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்று கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக இரண்டாக பிரிந்து செயல்படும் நிலையில், சசிகலா தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோர் பொத்தி பொத்தி காத்து வந்த இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் ஒதுக்கப்பட வேண்டும் என்று இருதரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
இதனிடையே சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது எனவும் ஒ.பி.எஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.
இரட்டை இலையை கைப்பற்றும் நோக்கத்தில் தற்போது ஒரு புது அணுகுமுறையை ஒ.பி.எஸ் அணி கையாண்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகளின் ஆதரவு எங்களுக்கே அதிகம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், மாவட்ட வாரியாக 6 ஆயிரம் பேர் கையெழுத்து அடங்கிய பிரமான பத்திரத்தை ஒ.பி.எஸ் அணியினர் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் 60 லட்சம் பேர் உறுதிபத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.