முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு.. ஒரே அறிவிப்பில் ஆளுநரை ஆடவிட்ட அமைச்சர் பொன்முடி.

By Ezhilarasan Babu  |  First Published Aug 8, 2022, 5:08 PM IST

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 


தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஏற்கனவே  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர்- மாநில அரசு இடையே மோதல் இருந்து வரும் நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பாஜக தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. அதே நேரத்தில்  ஆளுநராக ஆர்.என ரவி ஆளுநராக பொறுப்பேற்றது முதல் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான இணக்கமான சூழல் இல்லாமல் உள்ளது, தமிழக அரசின் பல்வேறு மசோதாக்கள், மற்றும் கோப்புகளில் ஆளுநர் கையொப்பம் இடாமல் இருந்து வருவதாகவும் தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: மீண்டும் வருகிறது 8 வழிச்சாலை..தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில்தான் பல்கலைகழக துணைவேந்தர்களை இனி மாநில அரசே நியமிக்கும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஆளுநருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுற்றது. இதே போல் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை  ஆளுநர் மாளிகை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தார். ஆனால் அதில் முதல்முறையாக மரபுக்கு மாறாக மத்திய அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார். இது அப்போது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: ஆக்ஸ்ட் 25 ல் பொறியியல் கலந்தாய்வு.. எப்போது வரை நடைபெறும்..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..

அதேபோல் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்ற சட்ட மசோதா ஏப்ரல் 25ஆம் தேதி சட்டம் மன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார், அப்போது அதைக் கண்டித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர், அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மாநில அரசை அவமரியாதை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது, மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு உள்ளது என கண்டித்திருந்தார். அதாவது ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது எனவே அந்த அடிப்படையில் மாநில அரசே துணை வேந்தரை நியமிக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாநில துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அரசின் உரிமைகள் பயன்படுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது என கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற நிலையில் அமைச்சர் பொன்முடியின் ஆளுநர் மாநாடு நடைபெறும் என அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 
 

click me!