துண்டா சிக்கும் ராஜேந்திர பாலாஜி.. இத்தனை கோடியா..? திமுக ஆட்டம் ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published May 17, 2021, 3:53 PM IST
Highlights

ராஜேந்திர பாலாஜி, மற்றும் அவரது பினாமிகள் ஆவினில் 100கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், அதில் ரூ.61 கோடி ஊழலுக்கான ஆதரங்களை தற்போதுள்ள அமைச்சரிடம் அளித்துள்ளதாக கூறினார்.  

ஆவினில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகளை களையெடுத்தால் மட்டுமே இழப்பீட்டை சரிசெய்ய முடியும் என்று பால்வளம் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சரை சந்தித்து பால்வளம் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி மனு அளித்தார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, மற்றும் அவரது பினாமிகள் ஆவினில் 100கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், அதில் ரூ.61 கோடி ஊழலுக்கான ஆதரங்களை தற்போதுள்ள அமைச்சரிடம் அளித்துள்ளதாக கூறினார். அதேபோல் ஆவனில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகளை களையெடுத்தால் மட்டுமே இழப்பீட்டை சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறினார். 

அதற்கு அமைச்சர், முதல்வர் கவனத்திற்கு இப்பிரச்சினையை எடுத்து சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பதாக தெரிவித்ததாக கூறினார், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு பால் வினியோகம் செய்யும், பால்வள முகவர்கள், மற்றும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

 

click me!