கம்யூனிஸ்டுங்க ஜெயிச்சால் அது மகா கேவலம்யா: ரிசல்ட் வரும் முன் கூட்டணிக்குள் ரவுண்டு கட்டும் புது புகைச்சல்.

By Vishnu PriyaFirst Published Apr 20, 2019, 1:41 PM IST
Highlights

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுவரையில் தங்கள் அரசியல் வாழ்வில் எவ்வளவோ கேவலங்களை சந்தித்திருக்கின்றனர். ஆனால் இந்த முறை  தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பின் தாறுமாறான விமர்சன தாக்குதலை சந்தித்தனர்.  கடந்த சட்டமன்ற  தேர்தலில் மக்கள் நல கூட்டணி எனும் ஒரு தளத்தை அமைத்து, தி.மு.க.வை மிக மட்டமாக திட்டியவர்கள் இப்படி ஒரேடியாக ஸ்டாலினின் காலில் போய் விழுந்ததை விமர்சகர்கள் விட்டு வைக்காமல் வெச்சு செய்தனர். 
 

தமிழகத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுவரையில் தங்கள் அரசியல் வாழ்வில் எவ்வளவோ கேவலங்களை சந்தித்திருக்கின்றனர். ஆனால் இந்த முறை  தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பின் தாறுமாறான விமர்சன தாக்குதலை சந்தித்தனர்.  கடந்த சட்டமன்ற  தேர்தலில் மக்கள் நல கூட்டணி எனும் ஒரு தளத்தை அமைத்து, தி.மு.க.வை மிக மட்டமாக திட்டியவர்கள் இப்படி ஒரேடியாக ஸ்டாலினின் காலில் போய் விழுந்ததை விமர்சகர்கள் விட்டு வைக்காமல் வெச்சு செய்தனர். 

ஆனால் தேர்தல் அரசியலே தங்களின் தற்போதைய ஒரே சித்தாந்தம் என்று மாறிவிட்ட காம்ரேடுகள் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஸ்டாலினிடம் போராடி நான்கு தொகுதிகளை வாங்கிக் கொண்டனர். திருப்பூர், நாகையில் இந்திய கம்யூனிஸ்டும், கோவை மற்றும் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் போட்டியிட்டன.  

ஸ்டாலின் இந்த நான்கு தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார் பாகுபாடின்றி. இந்த நிலையில், மதுரையில் அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் ஓட்டுக்கு பணத்தை அள்ளி வீசினர். அப்போது தி.மு.க. நிர்வாகிகள், கம்யூனிஸ வேட்பாளர் வெங்கடேசனிடம் ‘தோழரே நீங்களும் ஏதாச்சும் கொடுத்தால்தான் பொழைக்க முடியும். உங்களால இயன்றதை கொடுங்க, நாங்களும் சப்போர்ட் பண்றோம்.’ என்றார்களாம். ஆனால் எழுத்தாளரோ ‘காசு கொடுத்து ஓட்டு வாங்குவது எங்கள் கொள்கை கிடையாது.’ என்று ஒற்றைக் காலில் நின்று மறுத்துவிட்டாராம். 

இதைக் கேள்விப்பட்டு மற்ற மூன்று தொகுதிகளின் சீனியர் காம்ரேடுகளும் ‘நோ மணி’ என்று மறுத்துவிட்டனர். டென்ஷனான தி.மு.க.வினர், ‘என்னங்க தோழர் புரிஞ்சுக்காம பேசுறீங்க. எல்லாமே உங்க பழைய சித்தாந்தப்படிதான் அரசியல் பண்றீங்களா? உங்களுக்காக நாங்க பிரசாரத்துக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணினோம். அப்பல்லாம் வேண்டாமுன்னு சொல்லி  கையை தடுக்கவா செஞ்சீங்க? இப்ப நீங்க பணம் கொடுக்காமல் போயி தோற்றால், அது கூட்டணிக்கு பெரிய சறுக்கல். தேசியளவுல சிக்கல்கள் கிளம்ப நீங்களும் காரணமாகிடுவீங்க.’ என்று செம்ம கெத்தக கேள்வி கேட்டு மடக்கியிருக்கின்றனர். 

ஆனாலும் வழிக்கு வரவே வராத கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள், ‘நாங்கள் பணம் கொடுக்காம ஜெயிப்போம். ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்குதுங்கிறதை நிரூபிப்போம்.’ என்றார்களாம். 

இந்நிலையில் தாங்கள் நேரடியாக போட்டியிடும் ஏரியாக்களிலும், காங்கிரஸ் மற்றும் கூட்டணியின் மற்ற கட்சிகள் போட்டியிடும் பகுதிகளிலும் ஓரளவுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து முடித்த தி.மு.க.வினர்...”என்ன கெத்து பாருங்கய்யா இந்த கம்யூனிஸ்டுகளுக்கு. தோத்தாலும் அவங்க அதைப்பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம, அடுத்த தேர்தலுக்கு வேற கூட்டணிக்கு ஓடிடுவாய்ங்க.
 
ஆனா ஒண்ணு அவங்க ஜெயிச்சுட்டா, அது நமக்குதான் பெரிய அசிங்கம். ‘சொன்னோம்ல, பணம் கொடுக்காமலே ஜெயிப்போமுன்னு. நீங்க பணம் கொடுத்துமே இந்தயிந்த தொகுதியில தோத்துட்டீங்களே  தோழரே’ன்னு  காலாகாலத்துக்கும் நம்மளை கேவலமா பேசுவாங்க, இன்னும் பல தேர்தலுக்கு இந்த புள்ளிவிபரத்தை சொல்லியே கழுத்தறுப்பாய்ங்க. 
அதனால அவங்க ஜெயிக்காம இருக்குறது நம்ம தன்மானத்துக்கு நல்லது. ஜெயிக்காட்டினாதான் நம்ம கைக்குள்ளே இருப்பாய்ங்க.” என்று குமுறிக் கொட்டினார்களாம். 
அஹா என்னா கூட்டணி தர்மம்யா!

click me!