அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது -  94 போலீசார் காயம், 40 பேர் கைது கமிஷனர் ஜார்ஜ் பேட்டி

 
Published : Jan 23, 2017, 09:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது -  94 போலீசார் காயம், 40 பேர் கைது கமிஷனர் ஜார்ஜ் பேட்டி

சுருக்கம்

சென்னையில் நடந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சென்னை முழுதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மெரினாவில் நடந்த போராட்டத்தில் அரசு தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட கோரிக்கையை விளக்கி அமைதியாக கலைந்து செல்ல சொல்வதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. 
மெரினா போராட்டக்காரர்கள் மத்தியில் சமூக விரோதிகள் ஊடுருவி இருந்தனர்.  

போராட்டகுழுவில் சிலர் மிரட்டல் , அச்சுறுத்தல் உளவுத்துறை விடுத்ததாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது.


போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினோம், போலீசார் அமைதியாக தடிகள் இன்றி அவர்களை அப்புறப்படுத்தினோம். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல அனுமதி எடுத்தோம். சாலைகளை மூடினோம்.  


அவர்களை திரும்ப  போராட்டக்களத்தில் அனுமதிக்கவில்லை. அதை போராட்டக்காரர்கள் இடையே ஊடுருவிய சமூக விரோதிகள் அதை  விரும்பவில்லை.

அவர்கள் தொடர்ச்சியாக தாக்கினர். சென்னையில் மெரினா மட்டுமல்ல 98 இடங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளது.


40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் தவறான வதந்திகள் பரப்பபட்டன. வாட்ஸ் அப் சமூக வலைத்தளங்கள் அதற்கு பயன்படுத்தப்பட்டது.


போலீசார் மீதே கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதனால் 8 இடங்களில் தடியடி நடத்த வேண்டிய ச்சுழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தக்கியதில் 94 போலீசார் காயமடைந்துள்ளனர். இன்று இரவும்  ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபடுவார்கள்.

நாளை காலை இயல்பு நிலை திரும்பும் அச்சப்பட தேவை இல்லை. 
பொதுமக்களை குழப்பும் வகையில் பல தகவல்கள் போலியாகா பரப்பபட்டு வருகிறது.

அவ்வாறு தவறான தகவல் பரப்புவோர் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் போராட்டக்காரர்கள் மத்தியில் ஊடுருவி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.


போலீசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது , வாகனக்களுக்கு தீவைத்ததாக உறுதிபடுத்தப்படுமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு