பொதுமக்களை கொடூரமாக தாக்கும் போது நீங்க எந்த சிஸ்டத்தை ரெடி பன்னிட்டு இருந்திங்க? ரஜினியை ரவுண்டு கட்டும் விமர்சனங்கள்...

First Published Apr 11, 2018, 11:44 AM IST
Highlights
Comments against Rajinikanth expresses anguish over protester thrashing cop


“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி IPL போட்டிக்கு எதிராக நடந்த கண்டன போராட்டத்தில் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் நடந்த சண்டையை சுட்டிக்காட்டி இப்படி ஒரு ட்விட் போட்டு தனது கண்டனத்தை அழுத்தமாக பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

போலீஸ் தாக்கப்பட்டது மிக தவறு. சட்டத்தை யார் கையிலெடுத்தாலும் தவறுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறிய ரஜினி ஆலோசனை சொல்றார். வன்முறை நம் கலாச்சாரமா? அவரோட ட்வீட்ல கடைசி வாக்கியத்தை படிங்க... உண்மை விளங்கும்.. இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றனும்'னு சொல்ற அளவுக்கு நாம் மோசமான மக்களா. போலீஸ் செய்த கொடுமைகளுக்குமுன் இது சாதாரணம். இதுக்கு இவர் இவ்வளவு ரியாக்ட் ஆகவேண்டிய அவசியமில்லை. இது ஒரு கட்சியின் மேலான வெறுப்பு என சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருன்கின்றனர்.

ஜல்லிக்கட்டு ஜனநாயக போராட்டத்தில் காவல்துறை பொதுமக்களை ,பெண்கள் குழந்தைகள் என்று கூட கருணையில்லாமல் அடித்தார்கள், மீனவ சொத்துக்களை சூறையாடினார்கள் அப்போ ரஜினிசார் எந்த சிஸ்டத்த ரெடி பண்ணிட்டு இருந்திங்க?அதே சீருடை போட்ட கருணையே இல்லாத காவலர் போன மாசம் தலைக்கவசம் அணியாமல் மனைவியுடன் பைக்கில் போகும்போது, நிற்கவில்லை என்பதால் எட்டி

உதைச்சு கர்ப்பிணிய சாகடிச்சப்போ? கர்நாடக போலீஸ் விரட்டி அடிச்சி 40 பேருந்த எரிச்சபோ? ஆந்திர காட்டுகுள்ள 20 பேர சீருடை போட்டு சுட்டப்போ? இந்திய கடற்படையே தமிழ்நாட்டு மீனவன சுட்டப்போ? சசி பொருமாள சீருடைல நின்னு கொன்னப்போ? நீங்க எங்க போயி சிஸ்டத்த ரெடி பண்ணிட்டு இருந்திங்க?
சரி அதெல்லாம் இருக்கட்டும், காவல்துறை அநீதி பக்கம் நின்று மக்கள் மீது வன்முறையை ஏவி விட்டால், அவர்களை தட்டி கேட்பதும் நல்ல கலாச்சாரம் தான்.

இந்த வன்முறை கலாச்சாரத்தை திரையில் காட்டி, கைதட்டல் வாங்கி சம்பாதித்த நடிகர்கள் எல்லாம் அறிவுரை வழங்குவது தான் எந்த கலாச்சாரம்னு தெரியல. தெரிஞ்சா சொல்லுங்க தலிவா...8 வயது குழந்தையை 8பேர்(காவல்துறையினரும் சேர்ந்து) வன்புணர்ந்து கொல்லும் போதும்?, ஹெல்மெட் போடலனு 3 ட்ராபிக் போலீஸ் சேர்ந்து ஒரு இளைஞனைக் கம்பியில் கட்டி வைத்து அவனது அம்மா, சகோதரி முன்னாடியே அடித்து, கையை உடைச்சாங்களே, அப்போ கோமால இருந்தீரோ?

அதெல்லாம் விட கடந்த வருஷம் இந்த உலகமே ஒரு பயங்கர சம்பவத்தை பார்த்தது, ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவின் நடந்த போது கடற்கரையை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் கலவரம் வெடித்தது. நடேசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, நடுக்குப்பம், ரூதர்போர்டு புரம் ஆகிய பகுதிகளில் கல்லெறிச் சம்பவங்கள் நடந்தன. இதற்குப் பிறகு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது. கல்லெறியில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியாத நிலையில், வீடுவீடாகப் புகுந்து, உள்ளிருந்தவர்களைத் தாக்கியது.

நடுக்குப்பம் பகுதியில் இருந்த மிகப்பெரிய மீன் சந்தை ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தின் முன்பாக இருந்த இருசக்கர வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. (இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் தேவையின்றித் தாக்கும் காட்சிகளும் காவல்துறையினரே வாகனங்களுக்கும் வீடு ஒன்றுக்கும் தீவைக்கும் காட்சிகளும்) இந்த வன்முறைகளை கிள்ளியெறியாமல் எந்த சிஸ்டத்தை ரெடிபன்னிட்டு இருந்தீங்க? என அடுக்கடுக்காக விமர்சனங்கள் வந்து விழுகின்றன. எப்படி சமாளிப்பாரோ ரஜினி...

ஒருவேளை ஹெச்.ராஜா ஒரு சர்ச்சை டிவிட் போட்டுவிட்டு அந்த பழியை தூக்கி அட்மின் மீது போட்டுவிட்டு அந்தர் பல்டி அடித்ததைப்போல, ரஜினியும் அட்மின் மீது பழியை போட்டுவிட்டு எஸ்கேப் ஆயிடுவார் போல....

click me!