குடியால் மனைவியை இழந்த காமெடி நடிகர்.. மதுவை கைவிட்டதால் முதலமைச்சரான பகவந்த மான்.

Published : Mar 11, 2022, 07:29 PM IST
குடியால் மனைவியை இழந்த காமெடி நடிகர்.. மதுவை கைவிட்டதால் முதலமைச்சரான பகவந்த மான்.

சுருக்கம்

அதன் அடிப்படையில் அவரை முதல்வர் வேட்பாளராக களமிறக்கியது ஆம் ஆத்மி கட்சி.அதேபோல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் போன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவித்தார் அவர். ஏற்கனவே மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும் அம்மாநிலத்தில் இந்த வாக்குறுதிகளை எல்லாம் எப்படி நிறைவேற்ற முடியும் என காங்கிரஸ்- பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு எதிரான பிரச்சாரங்களை முன்வைத்தன. 

பஞ்சாபில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலின் போது போதைக்கு அடிமையானவர் என விமர்சிக்கப்பட்ட காமெடி நடிகர்  பகவந்த் மான் தான், இப்போது அம்மாநிலத்தில் முதலமைச்சராகி இருக்கிறார். குடிகாரர் பொறுப்பில்லாதவர் என அம்மாநில மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அவர்தான் தற்போது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். மதுவால் மனைவியை இழந்து, காமெடி நடிகர் என்ற தொழிலையும் இழந்து கையறு நிலைக்கு தள்ளப்பட்ட பகவத் மான் எப்படி முதலமைச்சராக உயர்ந்தார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

தமிழகத்தைப் போலவே  மொழி உணர்வு, மாநில உணர்வு மேலோங்கிய மாநிலமாகவே பஞ்சம் மாநிலம் இருந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் சிரோமணி அகாலி தளம் போன்ற கட்சிகள் முக்கிய கட்சிகளாக இருந்து வருகின்றன. இந்நிலையில் தான் ஆம் ஆத்மி கட்சியை மாநிலத்தில் பரவச் செய்து முதலமைச்சர் அரியணையை பிடித்திருக்கிறார் பகவந்த் மான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநில தொலைக்காட்சிகளை திருப்பினால் அதில் வரும் காமெடி நிகழ்ச்சிகளில் சகிதம் தோன்றி  மக்களை மகிழ்வித்து கொண்டிருந்தவர் தான் பகவந்த் மான். எப்போதும் அவரது பேச்சில் சமூகப் பொறுப்புணர்வு, புரட்சிகர கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும் என்பதால் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிராக மக்கள் கட்சி என்ற ஒன்றை தொடங்கி முதல் தேர்தலிலேயே தோல்வியை சந்தித்தார். அப்போதுதான் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் பகவந்த் மான். அந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகளை எதிர்த்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தார் பகவந்த் மான். அதன் பயனாக  ஆம் ஆத்மிக்கு 4 பேர் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்கனவே தொலைக்காட்சிகளில் புரட்சிகரமான பேசிவந்த  பகவந்த் மான் மக்களவையிலும் தனது கருத்துமிக்க பேச்சுக்களை எடுத்துவைத்தார். அப்போது அவரது பேச்சுக்கள் வைரலானது. ஆனால் அவர் மீது இருந்து குடிகாரர், மதுப்பிரியர் போன்ற விமர்சனங்கள் விலகவில்லை.  அவருக்கு எதிராக வேண்டுமென்றே சில வீடியோக்கள் நாடு முழுவதும் பகிரப்பட்டது.

அதிலும் அவர் தேர்தலை சந்திக்கும் போது அவருக்கு எதிராக இந்த பிரச்சாரம் தீவிரமாக இருந்தது. இதனால் ஆம் ஆத்மி கட்சியால் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற முடியுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது, ஒரு கட்டத்தில் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றார்.மது தன் வாழ்க்கைக்கு வில்லனாக மாறி விட்டதை உணர்ந்த பகவந்த் மான் அதிலிருந்து விடுபட முடிவெடுத்தார். மிகத் தெளிவான சிந்தனையில் செயல்பட ஆரம்பித்தார். அப்போதுதான் இந்த முறை யாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது என்ற கேள்வி ஆம் ஆத்மி கட்சிக்குள் எழுந்தது. அப்போது செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப கோரி பஞ்சாப் மக்களிடையே பகிரங்கமாக ஆம் ஆத்மி கட்சி வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பெரும்பாலான மக்கள் குடிக்கு அடிமையாகி  பின்னர் அதிலிருந்து மீண்ட பகவத் மான் பெயரே அதிகளவில் தேர்வு செய்தனர். 

அதன் அடிப்படையில் அவரை முதல்வர் வேட்பாளராக களமிறக்கியது ஆம் ஆத்மி கட்சி. அதேபோல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் போன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவித்தார் அவர். ஏற்கனவே மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும் அம்மாநிலத்தில் இந்த வாக்குறுதிகளை எல்லாம் எப்படி நிறைவேற்ற முடியும் என காங்கிரஸ்- பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு எதிரான பிரச்சாரங்களை முன்வைத்தன.

ஆனாலும் பஞ்சாப் மக்கள் பகவந்துக்கு தங்களது ஏகோபித்த ஆதரவை தெரிவித்து அவரை முதலமைச்சராக்கியுள்ளனர். எதிர்பார்த்தது போலவே தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள  பகவந்த் மான், வழக்கமாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழா இந்த முறையில் பகத்சிங்கின் சொந்த  ஊரில் வைத்து நடைபெறும் என அறிவித்துள்ளார். போதையில் இருந்து மீண்டு முதலமைச்சரான பகவந்த் மான் நிச்சயம் பஞ்சாப்பை கடனிலிருந்து மீட்பார் என்று நம்பிக்கை அம்மாநில மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. வாழ்த்துக்கள் பகவந்த் மான்...
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!