மேடையில் வந்து உட்காருங்க வானதி.. அழைத்த M.K ஸ்டாலின்.. உச்சிக் குளிர்ந்த பாஜக எம்எல்ஏ.

By Ezhilarasan BabuFirst Published Nov 22, 2021, 7:52 PM IST
Highlights

அப்போது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை மேடைக்கு வந்து அமரும்படி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற வானதி சீனிவாசன் புன்முறுவலுடன் மேடைக்கு வந்து திமுக அமைச்சர்கள் வரிசையில் அமர்ந்தார். 

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனை மேடையில் வந்து அமருமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார். வானதி சீனிவாசனும் புன்முறுவலுடன் மேடையில்  அமர்ந்தார். இந்த நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். கேவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு பொதுமக்கள் கோவையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். முற்றிலுமாக கட்அவுட்கள் தவிர்க்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. கொரோனா காலம் தொட்டு, மழைவெள்ளம் வரை கடந்த ஆறு மாத காலத்தில் திமுக ஆற்றிய பணிகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல்  பாஜக மிகக்கடுமையாக திமுகவை விமர்சித்து வருகிறது. ஆதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாஜகவே தன்னை எதிர்க்கட்சியாக பாவித்து வருகிறது. இதனால் தொடர்ந்து திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. நிச்சயம் தேர்தலில் வெற்றுபெற்று பாஜக சட்டமன்றத்திற்கு நுழையும் என பாஜக தலைவர்கள் முழங்கிவந்த நிலையில் அது கடந்த தேர்தலில் நிறைவேறியுள்ளது. அதன்படி பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எம். ஆர் காந்தி, பாஜக அகில பாரத மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கல்வியாளர் திருமதி டாக்டர் சரஸ்வதி ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று பாஜகவின் வெற்றி கணக்கை தொடங்கி வைத்துள்ளனர்.

அதேபோல் அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்றது முதல் திமுகவை துல்லியமாக விமர்சித்து வருகிறார். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் தங்கள் கட்சிக்கு தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திமுகவுக்கு ரியல் எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியிலும் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் விதமாக இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது  முதல்வருக்கு வழிநெடுகிலும் சாலையோரத்தில் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். அப்போது விழா மேடைவரை  பேனர்கள் தவிர்க்கப்பட்டிருந்தது. அதேபோல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் மேடையில் அமைக்கப்பட்டிருந்த பேனரிலும்கூட முதல்வர் ஸ்டாலின் படம் தவிர்க்கப்பட்டது. இதை பொதுமக்கள் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதேபோல கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அரசு நல்ல திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை மேடைக்கு வந்து அமரும்படி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற வானதி சீனிவாசன் புன்முறுவலுடன் மேடைக்கு வந்து திமுக அமைச்சர்கள் வரிசையில் அமர்ந்தார். முதல்வரின் இந்த அணுகுமுறை அச்சரியப்பட வைத்தது. கோவையை அனைத்து துறைகளிலும் சிறந்த மாவட்டமாக மாற்ற அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது என முதல்வர்  அப்போது உரையாற்றினார். முன்னதாக 646 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பில் 25 ஆயிரத்து 573 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். 587 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திமுகவை பாஜக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு அரசு நிகழ்ச்சியில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் முதலமைச்சர் கண்ணியத்துடன் உரிய மரியாதை அளித்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

click me!