தமிழகத்தில் தனியாக வந்தாலும் கூட்டணியுடன் வந்தாலும் பாஜகவால் தலைதூக்க முடியாது – நாராயணசாமி பொளேர்…

Asianet News Tamil  
Published : May 20, 2017, 09:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
தமிழகத்தில் தனியாக வந்தாலும் கூட்டணியுடன் வந்தாலும் பாஜகவால் தலைதூக்க முடியாது – நாராயணசாமி பொளேர்…

சுருக்கம்

come alone or with come with coalition the BJP can not rise in Tamilnadu - Narayanasamy ...

தமிழகத்தில் தனியாக வந்தாலும் கூட்டணியுடன் வந்தாலும் பாஜகவால் தலைதூக்க முடியாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அதில், “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்.

அரசியல் காழ்ப்புணர்சியால் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது. தமிழகத்தில் தனியாக வந்தாலும் கூட்டணியுடன் வந்தாலும் பாஜகவால் தலைதூக்க முடியாது.

தற்போதைய வரிவிதிப்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

ஜூன் 3-ல் கருணாநிதியுன் வைர விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் என்ற முறையில் பங்கேற்பன்” என்று அவர் கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!