கே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் - கொலிஜியம் கூட்டத்தில் முடிவு

Asianet News Tamil  
Published : May 12, 2018, 10:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
கே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் - கொலிஜியம் கூட்டத்தில் முடிவு

சுருக்கம்

Collegium to take decision justice K M joesph will be a supreme court judge

உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் குழு நீதிபதி ஜோசப் மற்றும் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரைப் பரிந்துரை செய்தது. இதில் இந்து மல்ஹோத்ரா பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு ஜோசப்-ன் பரிந்துரையை நிராகரித்தது. இதனால் கொலீஜியம் குழு மற்றும் மத்திய அரசு இடையே கருத்து முரண்பாடு நிலவி வந்தது. இது குறித்து கொலீஜியம் குழு உச்சநீதிமன்றத்தில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தது. இந்த விவகாரத்தில் நேற்று மீண்டும் கொலீஜியம் குழு கூடியது.

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில், மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.

கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நேற்று கொலிஜியம் கூட்டம் நடந்தது. மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

முன்னதாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து நேற்று மீண்டும் கொலீஜியம் அமைப்பு குழு கூடியது. அதில், நீதிபதி ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் நீதிபதி செல்லமேஸ்வர், இந்த கொலீஜியம் கூட்டத்தை கூட்டும்பட கேட்டுக்கொண்டார். இதற்காகத் தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதினார். அதில், 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு மீண்டும் நீதிபதி ஜோசப்பின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படியே நீதிபதி செல்லமேஸ்வரின் வலியுறுத்தலுக்கு இணங்க நீதிபதி கே.எம். ஜோசப் அவர்களையே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜீயம் பரிந்துரைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!