
ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து கொடுக்காததால் செம கடும்பில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினர், திருப்பதிக்கு சாமிஅ கும்பிட வந்த பாஜக தலைவர் அமித்ஷாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது கண் எதிரிலேயே பாஜக தொண்டர்களை, தெலுங்குதேசம் கட்சியினர் சரமாரியாக தாக்கியது, அமித்ஷாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுள்ளது.
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற இருப்பதையொட்டி, பா.ஜ.க தேசியத் தலைவர்அமித் ஷா, திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றிருந்தார். அங்கு அவருக்குச் சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
அதன்பின்பு, அமித்ஷா கோயிலில் இருந்து கார் மூலம் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது திருப்பதி மலை அடிவாரத்தில் கறுப்புக் கொடியுடன் காத்திருந்த தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் அமித் ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
மேலும், அமித் ஷாவின் காரை மறிக்க முயன்ற அவர்கள், அமித் ஷா மற்றும் பாஜக தொண்டர்கள் சென்ற கார் ஒன்றின் கண்ணாடியையும் உடைத்த னர்.
இதனால் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட் டது. இதன்பின் கார் கண்ணாடியை உடைத்த தெலுங்குதேசம் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு திருப்பதி வந்த அமித்ஷாவை தெலுங்குதேசம் கட்சியினர் ஓட, ஓட விரட்டியடித்து இருப்பது, ஆந்திராவிலும், பாஜக கட்சியினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.