விரைவில் கோயில் நிலங்களில் கல்லூரிகள்.. சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க நடவடிக்கை.. அமைச்சர் அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 4, 2021, 11:14 AM IST
Highlights

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அக்கோயிலுக்கு சொந்தமான 50 ஆயிரம் சதுரடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை கோயில்களில் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அன்னை தமிழில் அர்ச்சனை என்ற அடிப்படையில் நேற்று முதல் அமைச்சர் அதற்கான பதாகைகளை வெளியிட்டார்

இந்து அறநிலை துறை சார்பில் கோயிலுகளுக்கு சொந்தமான இடங்களில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். அதேபோல் பலர் கோயில்களில் இருந்த சிலைகளை தங்கள் வீட்டுக்கு கொண்டு சென்று வைத்து பூஜை செய்து வருகின்றனர், அதுபோன்ற சிலைகள் அனைத்தும் மீட்கப்படும் எனவும் அமைச்சர் அதிரடியாக கூறியுள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்பது, கோயில் நிலங்களில் உள்ள கட்டிடங்களுக்கான வாடகைதொகை முறையாக வசூலிப்பது, கோயில் சொத்துக்களுக்கான ஆவணங்களை இணையதளத்தில் வெளியிடுவது போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதோ, அதை எல்லாம் கண்டு பிடித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை  எழும்பூரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் வளாகத்தில் இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அக்கோயிலுக்கு சொந்தமான 50 ஆயிரம் சதுரடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை கோயில்களில் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அன்னை தமிழில் அர்ச்சனை என்ற அடிப்படையில் நேற்று முதல் அமைச்சர் அதற்கான பதாகைகளை வெளியிட்டார் எனவும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை முறைப்படி தொடங்க உள்ளது எனவும், இந்து அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய மாணவர்கள் பயிலும் வகையில் கல்லூரிகள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாகவும், அதன்படி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்லூரி அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். 

மேலும் அந்த இடத்தில் கோயிலுக்கு வருமானம் வரும் வகையில் வணிக வளாகங்கள் அமைக்கவும் திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறினார். இதே போல தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் பல்வேறு இடங்களில் கல்லூரிகள்  கட்டப்பட இருப்பதாக தெரிவித்தார். மேலும் கோயில்களில் இருந்த பல சிலைகளை  வீட்டுக்கு கொண்டு சென்று பலர் பூஜை செய்து வருகின்றனர் எனவும், அவைகள் விரைவில் மீட்க்கப்படும் என்றும் கூறினார். விரைவில் சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு  வரப்படுமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு தேவையான சட்டப் போராட்டத்தை நடத்தி முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனக் கூறினார். 
 

click me!