தேர்தல் தோல்வி.. கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நீக்கம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 29, 2021, 10:41 AM IST
Highlights

கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர். கி. வரதராஜன் (பொள்ளாச்சி), கோவை தெற்கு மாவட்டக் கழகப்பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் இவருடன் (டாக்டர் வரதராஜனுடன்) இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு துரைமுருகன் வெளியிட்ட அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வியை தழுவியது. 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக கைப்பற்றியது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை தாண்டியும் கோவையை அதிமுக கைப்பற்றியது திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு கோஷ்டி பூசல் காரணம் என்று திமுக தலைமைக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது.  இந்த சூழலில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜை மாற்றம் செய்யப்பட்டு பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 

click me!