தண்டனைக் கைதிகளுக்கு 100% தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.. சிறைத்துறை அதிரடி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jun 29, 2021, 10:34 AM IST
Highlights

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சிறைகளில் பணியாற்றும் 4,197 சிறைப் பணியாளர்கள் மற்றும் 4,099 தண்டனைக் கைதிகளுக்கு 100% தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சிறைகளில் உள்ள சிறைப் பணியாளர்கள் மற்றும் தண்டனைக் கைதிகளுக்கு 100% தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக சிறைகளில் உள்ள சிறைப் பணியாளர்கள், விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகளும் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகினர். குறிப்பாக 222 சிறைப் பணியாளர்கள், 74 விசாரணைக் கைதிகள் மற்றும் 16 தண்டனைக் கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

மேலும், 12 சிறைப் பணியாளர்கள் தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைக் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கிளைச் சிறைகளில் தனிமைப்படுத்திய பின்னரே மத்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சிறைப் பணியாளர்கள், விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. 

அதனடிப்படையில் இன்றைய நிலவரப்படி 37 சிறைப் பணியாளர்கள், 26 விசாரணைக் கைதிகள் மற்றும் ஒரு தண்டனைக் கைதி மட்டுமே தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சிறைகளில் பணியாற்றும் 4,197 சிறைப் பணியாளர்கள் மற்றும் 4,099 தண்டனைக் கைதிகளுக்கு 100% தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 7,616 விசாரணைக் கைதிகளில் 69% பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளாதாகவும் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!