முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு எதிராக அவதூறு கருத்து...! அதிமுக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக சமூக வலை தளத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட அதிமுக  கோவை புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 


சமூக வலைதளத்தில்  அவதூறு கருத்து

தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் துபாய் பயணம் தொடர்பாக தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகியை  போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் தொடர்பாக சமூக வலை தளத்தில் அவதூறு கருத்துகள் பகிரப்படுவதாக திமுவினர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்து இருந்தனர்.  இதனையடுத்து  போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாவட்டம் அன்னூர் அருகேவுள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சுப்பிரமணியம் அவதூறு கருத்துகளை வெளியிட்டது தெரியவந்தது.

Latest Videos

அதிமுகவில் இணைகிறார்களா 10 திமுக எம்எல்ஏக்கள்...? ஸ்டாலினை அலறவிட்ட இபிஎஸ்

அதிமுக நிர்வாகி கைது
 
சுப்பிரமணியம் பணி புரியும் இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை செய்தனர். தொடர்ந்து சுப்பிரமணியத்தை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு, வதந்திகளை வெளியிடுதல் அல்லது பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை போலீசார்கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்

ரேஷன் கார்டில் பெயர்,முகவரி மாற்றம் செய்யனுமா.? புதிய குடும்ப அட்டை வாங்கனுமா.? தமிழக அரசின் புதிய அறிவிப்பு

 

click me!