நடுவானில், பறக்கும் விமானத்தில், தில்லா ஸ்டாலின் முன்னிலையில் பெண் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..

By Ezhilarasan Babu  |  First Published Sep 7, 2022, 2:30 PM IST

விமானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்துக்கொண்டிருந்த போது நடுவானில், பெண் ஒருவர் அவரிடம் நாடகம் நடித்து காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


விமானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்துக்கொண்டிருந்த போது நடுவானில், பெண் ஒருவர் அவரிடம் நாடகம் நடித்து காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தன் இளம் வயதில் புரட்சிகர வசனங்கள் பேசி ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இளம் வயதிலேயே பேரறிஞர் அண்ணா முன்னிலையில் பல நாடகங்களை அவர் அரங்கேற்றியுள்ளார். தற்போது வரையிலும் கலை இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவராகவே நமது முதல்வர் இருந்து வருகிறார். இந்நிலையில்தான் இன்று அவர் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: ரேஷன் கார்டில் பெயர்,முகவரி மாற்றம் செய்யனுமா.? புதிய குடும்ப அட்டை வாங்கனுமா.? தமிழக அரசின் புதிய அறிவிப்பு

ராகுல் காந்தியின் நடை பயணத்தைத் தொடங்கி வைக்க தமிழக முதலமைச்சர் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார், அதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார், அவருடன் திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர் பாலு, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடன் பயணித்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தார், அப்போது திடீரென அவளின் முன் வந்து நின்ற பெண் ஒருவர், தான் ஒரு வங்கி மேலாளர் என்றும், தனது பெயர் கௌசல்யா என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், அப்போது முதலமைச்சர் சொல்லுங்கள் என்ன வேண்டும் என அந்த பெண்ணிடம் கேட்க, அப்போது அந்தப் பெண் தான் 1990 களில் ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் நடந்த நாடகத்தில் தான் பேசியதை முதல்வர் முன்னிலையில் அப்படியே நடித்துக் காட்ட விரும்புவதாகக் கூறினார். அதற்கு முதலமைச்சரும் சரி என ஒப்புதல் அளித்தார். 

இதையும் படியுங்கள்: அடுத்தடுத்து அஸ்திரத்தை ஏவும் ஓபிஎஸ்.. தப்புவாரா எடப்பாடியார்..!

அப்போது அந்தப் பெண் தான் சிறுவயதில் பேசிய வசனங்களை அடிமாறாமல் அடுக்கடுக்காக பேசினார், தனது வசனத்தின் இறுதியில் தரணி போற்றும் அளவிற்கு தமிழ் நாட்டை வழிநடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் எங்கள் ஸ்டாலின் எனக்கூறி தமிழக முதலமைச்சரை புகழ்ந்தார், அந்தப் பெண்ணின் பேசிய வசனத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வத்துடன் கேட்டார், பின்னர் அந்தப் பெண்ணின் பேச்சாற்றலை முதலமைச்சர் கைகொடுத்து பாராட்டினார். தமிழக முதல்வர் பாராட்டியதால் அந்தப் பெண் மகிழ்ச்சியில் திளைத்தார்.

 

இந்நிலையில் அருகிலிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. பின்னர் முதலமைச்சர் தூத்துக்குடி விமான நிலையம் சென்று சேர்ந்தார், அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவருக்கு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர். பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நெல்லை வழியாக சாலை மார்க்கமாக முதலமைச்சர் கன்னியாகுமரி சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!