கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! குற்றவாளிகள் 6 பேர் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்..! என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Nov 7, 2022, 1:51 PM IST

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து சென்றனர்.


கோவை கார் வெடி விபத்து

கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரம் கோயில் முன்பாக கடந்த 23 ஆம் தேதி கார் வெடி விபத்து சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் கார் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிர்இழந்தார். இதனையடுத்து நடைபெற்ற சோதனையில் ஜமேஷா முபீன் விட்டில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த  வழக்கில் உயிரிழந்த ஜெமேஷா முபினின், உறவினர்கள் மற்றும் நண்பர்களான கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ்,பிரோஸ் இஸ்மாயில்,  முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

Tap to resize

Latest Videos

இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி

என்ஐஏக்கு வழக்கு மாற்றம்

இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இதில் தொடர்புடைய அப்சர்கான் என்பவரையும் 6 ஆவதாக குற்றவாளியாக போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக விசாணை நடத்த ஏதுவாக கோவை மத்திய சிறையில் உள்ள அந்த 6 பேரையும் போலீசார் சென்னை புழல்சிறைக்கு அழைத்து சென்றனர்.

மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா.? அமைச்சர்கள் சொல்வது ஒன்று, நடப்பது வேறு.! திமுகவை இறங்கி அடிக்கும் சசிகலா

புழல் சிறைக்கு மாற்றம்

கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களின் பாதுகாப்புடன் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் ஆறு பேரும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிறையிலிருந்து ஆறு பேரையும் அழைத்துச் செல்லும் பொழுது அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை சந்திக்க முற்பட்டபோது காவல்துறை வாகனம் நிறுத்தப்படவில்லை. 

இதையும் படியுங்கள்

ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாதவர்..! தமிழிசைக்கு எதிராக சீறிய முரசொலி

click me!