கோவையில் முழு அடைப்பு! நாங்கள் சொல்லவே இல்லை!.. நீதிமன்றத்தில் விளக்கமளித்த அண்ணாமலை

By Raghupati R  |  First Published Oct 28, 2022, 4:12 PM IST

கோவையில் முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை கார் சிலிண்டர் விபத்து:

கோவையில், காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் வரும் 31 ஆம் தேதி பந்த் நடைபெறும் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடைவிதிக்க  கோவையை சேர்ந்த தொழிலதிபரான வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத்அ சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அவசியம்.

இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

பாஜக சார்பில் பந்த்:

ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கியதாக தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தரப்பில் இந்த பந்த் நடத்த மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை என்றும், கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதவும், பந்த் நடத்துவதா அல்லது வேறு என்ன வகையான போராட்டம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்வாங்கிய பாஜக:

மேலும், மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும், அதனை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் இடைக்கால உத்தரவு ஏதும் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு அடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை  நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க..இந்திய ரூபாய் நோட்டுகள் & நாணயங்கள் எப்படி உருவாகிறது தெரியுமா ? இவ்வளவு ரூல்ஸ் இருக்கா ?

click me!