4 நாட்களுக்கு பிறகு என்ஐஏயிடம் வழக்கை ஒப்படைத்தது ஏன்.! காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளதா..? ஆளுநர் ஆர்.என்.ரவி

By Ajmal KhanFirst Published Oct 28, 2022, 4:11 PM IST
Highlights

கோவை கார் வெடிவிபத்து வழக்கு விசாரணையில் தமிழக காவல்துறையின் பணிகள் பாராட்டத்தக்கது எனவும்,  ஆனால் காலம் தாமதிக்காமல் உரிய நேரத்தில் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியிருக்க வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.

கோவை கார் வெடி விபத்து- ஆளுநர் பேச்சு

கோவை கார் வெடி விபத்து தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்ய வைத்துள்ளது. இதனையடுத்து இந்த கார் வெடி விபத்தை என்ஐஏக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது. கோவை நவக்கரை பகுதியில் தனியார் கல்லூரியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சிறப்புரையாற்றினார்,பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பாரதம் உருவான நிலையில் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியோடு சேர்த்து பாரத பண்பாடுகளோடு கூடிய கல்வி முறை தேவைப்படுவதாக கூறினார். தமிழகம் பல முனிவர்கள், யோகிகளை கொண்டிருந்த மண் என்றும் யோகாவை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

உரிய நேரத்தில் விசரணை மாற்றியருக்க வேண்டும்

தீவரவாதம் நாட்டின் பெரும் பிரச்சனையாக உள்ளதாகவும், தீவிரவாத தாக்குதல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது எனவும் கூறினார்.  கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனவும், அதிக அளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது என தெரிவித்தார். தமிழக காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என கூறியவர், ஆனால் தமிழக அரசு கோவை கார் வெடி விபத்து சம்பவத்தை உரிய நேரத்தில் விசாரணையை என்ஐஏக்கு மாற்றியிருக்க வேண்டும் என தெரிவித்தார். ஏன் இந்த வழக்கை 4 நாட்கள் கழித்து என்.ஐ.ஏ அமைப்பிடம் ஒப்படைத்தார்கள் என்றும் கேள்வியெழுப்பினார். தமிழ்நாடு காவல்துறைக்கு என்.ஐ.ஏவை அழைத்து விசாரிக்க சொல்லும் அதிகாரம் இல்லையென்றும் ஆனால் அந்த முடிவை எடுத்தவர்கள் காலம் தாழ்த்தி எடுத்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார். 

கோவையில் 3000 போலீசார் குவித்திருப்பது ஏன்..? அமைச்சரின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்..! வானதி சீனிவாசன் ஆவேசம்

காவல்துறை சுதந்திரமாக செயல்படனும்

இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலில் நேரம் என்பது மிக மிக முக்கியம் எனவும் தெரிவித்தார். மேலும்  பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா பயங்கரவாத அமைப்பு என குற்றம் சாட்டிய அவர், கோவையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னால் பெரும் திட்டங்கள் இருந்துள்ளதாகவும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றும், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

கோவையில் முழு அடைப்பு! நாங்கள் சொல்லவே இல்லை!..நீதிமன்றத்தில் பல்டி அடித்த அண்ணாமலை

click me!