உதயநிதி பேசுவதை கூட்டணி கட்சி தலைவர்கள் புன்முறுவலுடன் கேட்டுக் கொள்ளதான் வேண்டும்.. அடங்கி போகும் அழகிரி..

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2021, 2:41 PM IST
Highlights

ஜல்லிக்கட்டில் தமிழர்களின் வீரம்,  பெருமையை பார்த்து ரசித்து கண்டுகளிக்கவே ராகுல் வருவதாகவும், இதில் தேர்தல் பிரசாரம் தேர்தல் தொடர்பான விஷயங்கள் இருக்காது. ராகுல் காந்தி விருப்பபட்டால் விவசாயிகளை சந்திப்பார்

234 தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான கருத்திற்கு இதையெல்லாம் கூட்டணி கட்சி தலைவர்கள் புன்முறுவலுடன் கேட்டுகொள்ள தான் வேண்டும் என் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி  தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாள் அன்று ராகுலின் தமிழ் வணக்கம் என்ற தலைப்பில், நாளை மறுநாள் ஜன 14 தேதி மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகத்திற்கு ராகுல் காந்தி வருகின்றார்.அப்போது ராகுலின் புகழ் கொடிகட்டிப் பறக்க உள்ளது. மதுரை அவனியாபுரத்திற்கு விமானம் மூலம் சரியாக 11 மணிக்கு வருகிறார். ஒரு நாள் நிகழ்ச்சியாக ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். தமிழகத்தில் 4 மணி நேரம் செலவிடுவார் என்றார். 

ஜல்லிக்கட்டில் தமிழர்களின் வீரம்,  பெருமையை பார்த்து ரசித்து கண்டுகளிக்கவே ராகுல் வருவதாகவும், இதில் தேர்தல் பிரசாரம் தேர்தல் தொடர்பான விஷயங்கள் இருக்காது. ராகுல் காந்தி விருப்பபட்டால் விவசாயிகளை சந்திப்பார். ராகுல் காந்தி தமிழக மக்களை அதிகமாக நேசிக்கிறார். ராகுல் காந்தி வருகையை அடுத்து மூத்த தலைவர்கள் வருவார்கள். அடுத்தப்படியாக ராகுல் காந்தி தமிழகம் வரும் போது கூட்டணி கட்சிகளை சந்திப்பார். தமிழகத்தில் ராகுல் காந்தி மிகப்பெரிய சுற்றுப்பயணம் செய்யவும் இருக்கிறார். குறிப்பாக, தெற்கு, மேற்கு டெல்டா மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் நடக்கின்ற மோசமான, தரமற்ற ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக ராகுலின் தமிழ் வணக்கம் நிகழ்ச்சி அமைய உள்ளதாக தெரிவித்தார். 

பாமக தலைவர் ராமதாசுடன் அமைச்சர்கள் சந்தித்தது தொடர்பாக வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இட ஒதுக்கீடு பேச தேர்தல் நேரத்தில் எதற்காக அமைச்சர்கள் செல்ல வேண்டும். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக தான் சென்று பேசி இருப்பார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக  டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் அகிம்சை கையாளப்படுகிறது. தடுப்பூசி குறித்து அகிலேஷ் யாதவ் விவாதங்களை எழுப்பி இருக்கிறார். ஆனால் ஐ.சி.எம்.ஆர், WHO மற்றும் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்களோ அதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். தடுப்பூசியில்  சந்தேகங்கள் இருந்தால் அதனை ஐ.சி.எம்.ஆர் தெளிவுப்படுத்த வேண்டும். இது அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டது இல்லை. 234 தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

எல்லா கட்சிக்கும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று ஆசை தான். அவர் அவர்களுக்கு எந்த தொகுதி வேண்டும் என்று கேட்டு பெருவார்கள். அதை எல்லாம் கட்சியின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். இதையெல்லாம் கூட்டணி கட்சி தலைவர்கள் புன்முறுவலுடன் கேட்டுகொள்ள தான் வேண்டும் என்றார். எங்கள் கூட்டணி, கொள்கை கூட்டணி, குடும்ப கூட்டணி ஆகும். யாருக்கும் யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. நெருக்கடி கொடுத்தால் அது நட்பாகாது. அப்படி இருந்தால் சிறந்த கூட்டணி இல்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து, தமிழக மேலிட பாஜக பொறுப்பாளர் சி.டி‌.ரவி, தமிழக பாஜக தலைவர் முருகன், அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

தற்போது சி.டி‌.ரவி முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அது எந்த அளவு உறுதியானது என்று தெரியவில்லை. அதிமுகவில் கூட்டணி நெருக்கடி இருக்காது. அதிமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் வேட்பாளரை ஏற்று கொள்ளத போது எப்படி அவர்கள் ஆட்சி செய்ய முடியும். சட்டமன்ற தேர்தலுக்கு  தமிழகம் வருமாறு பிரியங்கா காந்திக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்படும்.பிரியங்கா காந்திக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று நன்றாக வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

 

click me!