விவசாயிகளின் போராட்டமும் உயிர் தியாகமும் வீண் போகவில்லை.. வேளாண் சட்டங்களுக்கு தடை.. மத்திய அரசுக்கு மரண அடி.!

By vinoth kumarFirst Published Jan 12, 2021, 2:25 PM IST
Highlights

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த  உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த  உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 40வது நாட்களாக போராடி வருகின்றனர். விவசாயிகளுடான 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே, 'மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை' எனக் கூறி பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள், எஸ். போபண்ணா, ஆர்.எஸ்.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன், நேற்றுவிசாரணை நடைபெற்றது. அப்போது, 'வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நீடிப்பது கவலையளிக்கிறது. இது தொடர்பாக, அரசு தெரிவிக்கும் விளக்கம், ஏற்கும்படியாக இல்லை. இந்த சட்டங்களை, அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும் என்றனர். 

மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில்; வேளாண் சட்ட விவகாரத்தில் கட்டாயம் மாற்று தீர்வு தேவைப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விவகாரம் கவலையளிக்கிறது. விவசாய நிலங்களை விற்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவை பிறப்பிக்க உள்ளோம். பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

அரசியல் சார்பில்லாமல் குழு அமைக்கப்படும். சுமூக தீர்வு காண விரும்புவோர், தங்களது குழு அமைப்பததை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள  3 வேளாண் சட்டங்களுக்கும் நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும்,  மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும். பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசியல் சார்பற்ற குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க  உச்சநீதிமன்றம் குழு அமைத்துள்ளது.  குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

click me!