முதல்வர் கைரேகை பிரச்சனை ஓய்ந்தது..!!! - அதிமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 01:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
முதல்வர் கைரேகை பிரச்சனை ஓய்ந்தது..!!! - அதிமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

சுருக்கம்

நான்கு தொகுதி இடைதேர்தல் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்து பிரச்சனையில் கைரேகை வைத்ததை ஒட்டி எழுந்த பிரச்சனை வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுகொண்டதால் முடிவுக்கு வந்தது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்.22 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 42 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். . முதல்வர் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.  லண்டன் மருத்துவர் ரிச்சர்டு , எய்ம்ஸ் மருத்துவர்கள் , சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சையால் மிக விரைவாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான படிவம் எ மற்றும் பி யில் கையெழுத்துக்கு பதில் கைரேகை வைத்திருந்தார். இது பற்றி பலரும் விமர்சனம் செய்திருந்தனர். முதல்வர் உடல் நிலை அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை காரணமாக கையெழுத்தை சரியாக போட முடியாத நிலையில் கைரேகை வைக்க இருக்கும் வாய்ப்பை தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் இருந்ததால் கைரேகை இட்டு அரசு மருத்துவர் சான்றொப்பத்துடன் படிவம் அளிக்கப்பட்டது.

முதலில் கைரேகையில் பிரச்சனை ஏற்படுத்தியவர்கள் பின்னர் படிவம் பி -யில் முதல்வர் விரல் ரேகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதில் அரசு மருத்துவர் சான்றொப்பம் இல்லை என்று விமர்சனம் செய்திருந்தனர். 

 முதலில் கைரேகையில் பிரச்சனை ஏற்படுத்தியவர்கள் பின்னர் படிவம் பி -யில் முதல்வர் விரல் ரேகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதில் அரசு மருத்துவர் சான்றொப்பம் இல்லை என்று விமர்சனம் செய்திருந்தனர். 

இந்நிலையில் நான்கு தொகுதிகளிலும் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்தனர். இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான்கு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 

இதன் மூலம் கைரேகை பிரச்சனையில் சர்ச்சை எழுப்பியவர்களுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!