
அ.தி.மு.க.வில் எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்றும், காங்கிரஸ் கட்டாயம் வெற்றி பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது,
நடைபெறவுள்ள இந்த இடைதேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மாநில வளர்ச்சிக்கு பாடுபடும் என தெரிவித்தார்.
புதுவையில் தற்போது இடைத்தேர்தல் நடப்பதால் புதிய திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி திட்டம் நிறுத்தப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகர் பொய்யான பிரசாரம் செய்து மக்களை திசை திருப்புவதற்காக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.
10-ந் தேதிக்கு மேல் முக்கிய தலைவர்கள் புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் என்றும்,
கூட்டணி கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறோம் என்றும்,
இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் என்றார் தெரிவித்தார்.
மேலும், அ.தி.மு.க. வில் எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் கவலை இல்லை. அவர்கள் வெற்றி பெற முடியாது என்றும், காங்கிரஸ் கட்டாயம் வெற்றி பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்றும் தெரிவித்தார்.