KP Munusamy: வரலாறு தெரியாமல் பேசாதீங்க முதல்வரே.. ஊடகங்களுக்கு எதிராக சீறிய கே.பி.முனுசாமி..!

By vinoth kumarFirst Published Nov 28, 2021, 7:47 AM IST
Highlights

தமிழக முதலமைச்சர் வரலாறு தெரியாமல் பேசுகிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல விருதுகளை பெற்றுத் தந்தது கடந்த கால ஆட்சி இந்தியாவில் முதன்மை மாநிலம் என பல விருதுகள் பெறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக இதுபோல் குற்றம் சுமத்தக்கூடாது. 

சசிகலா உண்மையாக ஜெயலலிதா மீது பற்று பாசம் இருந்தால் இந்த இயக்கத்தை வாழ்த்த வேண்டும் என அதிமுக மாநிலங்பளவை உறுப்பினர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த கே.பி.முனுசாமி;- அதிமுக தலைவர்கள் நிர்வாகிகள் ஒன்றரை கோடி தொண்டர்கள் யாரும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக நினைக்கவில்லை. நினைக்காத ஒரு விஷயத்தை ஊடகங்கள் ஏன் ஞாபகப்படுத்துகிறது.  ஊடகங்கள் நாங்கள் நினைக்காதது போல் நீங்கள் மறந்துவிட வேண்டும். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சிறிது காலம் தொலைபேசியில் பேசினார்.  தற்போது கல்வெட்டு மூலமாக பேசி வருகிறார். சசிகலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. சசிகலா உண்மையாக ஜெயலலிதா மீது பற்று பாசம் இருந்தால் இந்த இயக்கத்தை வாழ்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் வரலாறு தெரியாமல் பேசுகிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல விருதுகளை பெற்றுத் தந்தது கடந்த கால ஆட்சி இந்தியாவில் முதன்மை மாநிலம் என பல விருதுகள் பெறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக இதுபோல் குற்றம் சுமத்தக்கூடாது. கடந்த ஆட்சியில் 24 மணி நேரத்தில் மழை நீர் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய புயல் நேரங்களில் ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது இருக்கும் ஆட்சியாளர்களால் மழை நீரை வெளியேற்ற முடியாமல் திணறி வருகின்றனர். 

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. நல்ல சிந்தனை உள்ள தலைவராக எதிர்க் கட்சிகளை மதிக்க கூடிவராக இருந்தால் ஜெயலலிதா அவர்கள் இந்த நாட்டிற்கு பல்வேறு அர்ப்பணிப்பான பணிகளை செய்திருக்கிறார்கள் என கருதி மேல்முறையீடு  செய்வார் என நம்புகிறேன்.

அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா எவ்வாறு வழிநடத்தி சென்றார்களோ அதுபோல கட்சி தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிநடத்தி செல்வார்கள். அம்மா உணவகம் போல கலைஞர் உணவகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் சிந்தனையில் உருவான திட்டத்தை தான் செயல்படுத்துகிறார்கள் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

click me!