ஆவடியில் தனி கண்ணாடி டம்ளரில் முதல்வர் ஸ்டாலின் டீ குடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.
ஆவடியில் தனி கண்ணாடி டம்ளரில் முதல்வர் ஸ்டாலின் டீ குடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக மழை மக்களையும், அரசு இயந்திரத்தையும் போட்டு தாக்கி வருகிறது. தொடக்கத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை வெளுத்து வாங்கிய மழை பின்னர் தலைநகர் சென்னையையும் விடவில்லை.
விடாது பெய்து தீர்த்த மழையால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் மட்டும் அல்லாது, புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் படகில் சென்று பார்வையிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வழுத்த மண்டலம் மேலும் வலுப்பெற்று வருவதால் மழை நீடித்து வர மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் பம்பரமாய் சுழன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர்.
அதிலும் மழைகோட்டு சகிதம், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல பகுதிகளுக்கு நேரிடையாகவே சென்று வெள்ளத்தின் கோரத்தையும், பாதிப்பையும் கண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். அதிகாரிகள் மேலும் சிறப்பாக பணியாற்றிட ஊக்கமும் அளித்தார்.
அப்படித்தான் முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து ஆவடி மாநகராட்சி, மூர்த்தி நகர் உள்ளிட்ட பல இடங்களுக்கு நேரில் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர கடையில் தேநீர் அருந்தினார். இந்த ஆய்வின் போது அமைச்சர் நாசர், எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏ கிருஷ்ணசாமி, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
ஆய்வின் போது சாலையோர கடை ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் சென்று தேநீர் அருந்தினார். சாலையோர கடையில் அவர் அமர்ந்திருக்க டீ மாஸ்டர் அவருக்கு தேநீர் தந்தார். அவர் மட்டுமல்லாது அருகில் இருந்தவர்களும் டீ அருந்தினர்.
தொடக்கத்தில் இது பாராட்டை பெற்றாலும், அந்த வீடியோ போக போக கடும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. டீக்கடைகளில் தற்போது நடைமுறையிலே இல்லாத இரட்டை டம்ளர் முறையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் என்று விளாசி தள்ளி இருக்கின்றனர்.
போகும் போதே டம்ளர் எடுத்திட்டு போனாரா? எதற்கு இந்த வீண் விளம்பரம் என்று இஷ்டத்துக்கும் கமெண்டுகளை நெட்டிசன்கள் அள்ளிவிட்டு வருகின்றனர். போதாத குறைக்கு வழக்கம் போல் ஷூட்டிங்காக எடுத்து தள்ளிவிட்டனர் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இல்லை…. இல்லை… சொந்தமாக கிளாஸ் எடுத்திட்டு வந்து ஸ்டாலின் டீ குடித்திருக்கிறார் என்றும் நெட்டிசன்ஸ் விமர்சித்து தள்ளி இருக்கின்றனர். இன்னும் சிலரோ இப்போது தெரிகிறதா? எது சமூக நீதி என்று போட்டு தாக்கி வருகின்றனர்.
இதுதான் ஆதிக்கத்தின் உச்சம், மற்றவர்களுக்கு சாதாரண கிளாஸ், முதல்வருக்கு கைப்பிடி வைத்த கண்ணாடி கிளாஸ், மற்றவர்களுக்கு சாதாரண கிளாஸ் என்று கூறி அட்ராசிட்டி காட்டி உள்ளனர்.
கடுமையான விமர்சனங்கள் வந்து விழுந்திருப்பதை கண்ட உடன்பிறப்புகளும் விடுவதாக இல்லை. முதல்வர் ஒருவர், சாதாரண டீக்கடையில் தேநீர் குடிப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று ஆதரவு கருத்துகளையும் பதிவிட்டு உள்ளனர்.
என்ன ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் இருந்தாலும்… முதல்வரின் ஆய்வு பணிகளை பாராட்டாமல் இருந்தது இல்லை என்றே கூறலாம்…!
டீகடைகளில் தற்போது நடைமுறையில் இல்லாத இரட்டை டம்ளர் முறையை மீண்டும் கொண்டுவந்தார் முதல்வர் 👏 pic.twitter.com/dKPrldQaYZ
— Selva Kumar (@Selvakumar_IN)