நவீன தமிழகத்தின் தந்தை ”கலைஞர் கருணாநிதி”..சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

By Thanalakshmi VFirst Published May 28, 2022, 8:01 PM IST
Highlights

தமிழகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி முழு உருவ சிலையை குடியரசு துணைதலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இந்நிலையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் , அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அதனைத்‌ தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌, “ தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு இடையே கலைஞர் சிலை அமைத்திருப்பது மிக மிக பொருத்தமானது. பெரியாரின் ஈரோடு பள்ளியில் படித்தவன் என்றும், அண்ணாவின் காஞ்சி கல்லூரியில் பயின்றவன் என்றும் தன்னை எப்பொழுதும் குறிப்பிட்டு கலைஞர் காட்டிருக்கிறார். அந்த கூற்றுக்கு ஏற்பவே பெரியாருக்கும் அண்ணாவுக்கும்  இடையிலே கலைஞர் சிலை அமைந்துள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

இன்றைக்கு நாம் காணக்கூடிய நவீன தமிழ்நாடு என்பது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. தனது தொலைநோக்கு பார்வை மற்றும் உள்ளார்ந்த அக்கறையால் தமிழகத்தை நவீனமாக மாற்றினார். மேலும் தமிழகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக அவர் விளங்கினார். அந்த மக்களின் உரிமையாகவே அவர் போராடினார். எழுதினார். பேசினார். சிறைக்கும் சென்றார்.

மேலும் ஆட்சி அதிகாரங்கள் கிடைத்தவுடன் அடித்தட்டு மக்களுக்காக திட்டங்களை தீட்டினார். எனவே தான் அவரை நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று இன்றைக்கும் புகழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். வாழ்வில்‌ ஒரு பொன்னாள்‌ என எந்நாளும்‌ போற்றும்‌ நாளாக இந்நாள்‌ அமைந்துள்ளது. பெரியாருக்கும்‌ அண்ணாவிற்கும்‌ இடையிலே கலைஞர்‌ கருணாநிதியின்‌ சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

கலைஞர் கருணாநிதி, அண்ணாவிற்கு பிறகு திமுகவை இறுதி மூச்சு வரை காத்தவர். தமிகத்தில் 5 முறை ஆட்சியில் இருந்து நவீன தமிழகத்தை உருவாக்கியவர். இலக்கியம்‌, திரைத்துறை, எழுத்து என அனைத்து துறைகளிலும்‌ முத்திரை பதித்தவர்‌ கலைஞர்‌ கருணாநிதி. தமிழகத்தில்‌ அவர்‌ தீட்டிய திட்டங்களால்‌ பயனடைந்தவர்கள்‌ ஏராளம்‌. 2001ஆம்‌ ஆண்டு அன்றைய ஆட்சியாளர்களால்‌ கொடுரமாக கலைஞர்‌ கருணாநிதி கைது செய்யபட்ட போது வெங்கையா நாயுடு அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தார்‌. அவர்‌ கலைஞர்‌ கருணாநிதி சிலையை திறந்து வைப்பதில்‌ உள்ளதிலேயே பெருமை. அனைத்து மக்களின்‌ தலைவராக இருந்தவருக்கு இன்றைக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு எத்தனை சிலை அமைத்தாலும்‌ ஈடாகாது” எனத்‌ தெரிவித்தார்‌.

மேலும் படிக்க: முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு..குடியரசு துணைத் தலைவர் திறந்து வைப்பு..நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு
 

click me!