இஸ்லாமிய படைத் திரள்கிறது.. அண்ணாமலை IPS க்கு ஆதரவாக.. மாஸ் காட்டும் பாஜக.

By Ezhilarasan Babu  |  First Published May 28, 2022, 7:58 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை IPS க்கு ஆதரவாக இஸ்லாமிய படைத் திரள்கிறது என வேலூர் இப்ராஹிம்முடன் நின்றவாறு யூடியூப்பர் முகம்மது அதுல்லா  புகைப்படம் ஒன்றை ட்வீட் செய்துள்ளனர்.


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை IPS க்கு ஆதரவாக இஸ்லாமிய படைத் திரள்கிறது என வேலூர் இப்ராஹிம்முடன் நின்றவாறு யூடியூப்பர் முகம்மது அதுல்லா  புகைப்படம் ஒன்றை ட்வீட் செய்துள்ளனர். இது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பலரும் இந்த ட்விட்டிற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து கூறி வருகின்றனர்.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் இளைஞர்கள் பலர்  பாஜகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தது மட்டுமல்லாமல் அவருக்கு அங்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் ஆனது முதல் அண்ணாமலைக்கு தமிழகத்திலும் அண்ணாமலை ஃபேன்ஸ் கிளப்,  அண்ணாமலை ஆர்மி போன்ற அமைப்புகள் சமூக வலைதளத்தில் இயங்கி வருகிறது. எதையும் புள்ளி விவரத்துடன் முன்வைக்கும் அவரது துள்ளியமிக்க பேச்சு, எதையும் அனுகுவதில் நிதானம், அதிகார தோரணை இல்லாத தன்னடக்கம் பலரையும் ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில் பொதுவாக பாஜக என்றாலே இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் இருந்து வருகிறது. அதை உடைக்கும் முயற்சியில் தமிழக பாஜகவில் சிறுபான்மையினர் பிரிவு உருவாக்கப்பட்டு அதில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில் பாஜகவில் பகிரங்கமாக பல இசுலாமியர்கள் தங்களை இணைத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜவின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, இந்து இசுலாமியர்கள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவில் தமிழு தீவிரமாக செயல்பட்டுவருகிறார் வேலூர் இப்ராஹிம், இதனால் அவர் பல இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். பலர் அவரை மிரட்டியும் வருகின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து பாஜகவின் சித்தாந்தத்தில் உறுதியாக நின்று களமாடி வருகிறார். ஒரு இஸ்லாமியராக இருந்துக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக கட்சியில் செயல்படுவது இசுலாமிய இனத்திற்கு செய்யும் துரோகம், வேலூர் இப்ராஹிம் ஒரு இஸ்லாமிய துரோகி என்றும் பலர் அவரை தாக்கி வருகின்றனர். ஆனால் அவர் பாஜகவை இஸ்லாமியர்களுக்கு எதிராக  கட்சி என்ற மாயை பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

அந்த பிம்பம் உடைக்கப்பட வேண்டும், அப்படி ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருவதற்கு பின்னால் மிகப் பெரிய சதி உள்ளது. நான் பாஜகவில் இணைந்தது முதல் என்மீது பாஜக தொண்டர்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். என்னிடம் எந்த விதமான மாறுபாட்டையோ, வெறுப்பையும் அவர்கள் காட்டியதில்லை, முழுக்க முழுக்க அன்பை காட்டி வருகின்றனர். உண்மையிலேயே என்னை தன் சொந்த சகோதரனாக பாவித்து வருகின்றனர். எனவே பாஜகவை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து இசுலாமிய சொந்தங்கள் பாஜகவுடன் பழகி பாருங்கள் பாசம் புரியும், நீங்கள் நெருங்கி பாருங்கள் நட்பு புரியும் என அவர் பேசி வருகிறார். இந்நிலையில் வேலூர் இப்ராஹிம் போலவே முகம்மது அதுல்லா என்பவர் பாஜகவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுக்கு ஆதரவாக பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது வீடியோக்கள் சமூகவலைதளத்தில் பிரபலமாகி வருகிறது.

பாஜக இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடும் கட்சி என்றும் பாஜகவினரை, அண்ணாமலையை விமர்சிப்போருக்கு தர்கரீதியாக பதிலடி கொடுப்பவராகவும் அதுல்லா இருந்து வருகிறார். அவர் ஊழலுக்கு பெயர்போன கட்சி திமுக, ஸ்டாலினால் நமது உரிமை பறிபோகும், பதில் சொல்ல வக்கில்லாத ஸ்டாலின், சிறுத்தையின் விளையாட்டு பாஜக சிங்கத்திடம் வேண்டாம் என பல்வேறு தலைப்புகளில் அவர் திமுக விடுதலை சிறுத்தைகள் இன்னும் பல இஸ்லாமிய இயக்கங்களை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் தீவிர பாஜக ஆதரவாளராக அறியப்படுகிறார் முகமது அதுல்லா, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வேலூர் இப்ராஹிம் இன்னும் சில இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து நின்றவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணாமலை IPS-க்காக இஸ்லாமியர்கள் படை திரள்கிறது என பதிவிட்டுள்ளார்.

 

இஸ்லாமியர்கள் படை திரள்கிறது அண்ணாமலை IPS காக pic.twitter.com/DRUmMzPRy7

— mohamed athaullah (@mohamedathau)

அவரின் இந்த பதிவுக்கு சமூகவலைதளத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அண்ணாமலை தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் நிலையில், அவருக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. அதே நேரத்தில் இஸ்லாமியர்களும் பெருமளவில் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இப்புகைப்படம் சான்றாக உள்ளது. 
 

click me!