அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் துறைகள் அமைச்சர் தென்னரசிற்கும், முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் மாற்றம்
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவரது ஜாமின் மனு இன்று மாலை விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி வகித்து வரும் துறைகள் இரண்டு அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.
கூடுதல் பொறுப்பு யாருக்கு.?
அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்த வந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மின்சாரத்துறையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாகவும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..
இதையும் படியுங்கள்