அக்.2ல் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்… இதோ முக்கிய அறிவிப்பு…

Published : Sep 29, 2021, 06:33 PM IST
அக்.2ல் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்… இதோ முக்கிய அறிவிப்பு…

சுருக்கம்

அக்டோபர் 2ம் தேதி பாப்பாப்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

சென்னை: அக்டோபர் 2ம் தேதி பாப்பாப்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்திருந்தாலும் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பில்  வரும் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி அளிப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆட்சியர் அலுவலகங்களில் வாரம்தோறும் திங்களன்று விவசாயிகள் குறைதீர் நடத்தலாம் என்று அனுமதி தரப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவல் எதிரொலியாக ஓராண்டுக்கும் மேலாக, மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்தப்பட வில்லை. இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன.

இந் நிலையில், வரும் 2ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வாரா, இல்லையா என்ற சஸ்பென்ஸ் பரவலாக எழுந்து இருந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. வரும் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் அன்று அவர் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

 

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!