முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம்.. மன்னிப்பு கேளுங்கள்.. அண்ணாமலை ஆவேசம்..!

By vinoth kumarFirst Published Nov 8, 2021, 7:03 PM IST
Highlights

கேரள முதல்வர் பினராயி விஜயனோ மரங்களை வெட்ட, தான் அனுமதி தரவில்லை என பதில் கடிதம் எழுதியுள்ளார். எதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல்வர் நன்றி சொன்னார் என தெரியவில்லை. முல்லை பெரியாறு அணையின் உரிமையை கேரள அரசிடம் மண்டியிட்டு நமது மாநில முதல்வர் ஸ்டாலின் சரணடைந்துவிட்டார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதல்வரின் செயலால் ஒட்டுமொத்த தமிழகமும் அவமானப்பட்டிருக்கிறது. தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக விமர்சித்துள்ளார். 

முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு அதிகாரிகள் இல்லாமல் கேரள அமைச்சர்கள் திறந்தனர். அந்த விவகாரத்தில் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த வசதியாக 15 மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரள அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால், அடுத்த நாளே மரம் வெட்ட வழங்கிய அனுமதியை கேரள அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. இதுவும் சர்ச்சையாகிய நிலையில், தமிழக பாஜக சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க;- என்ன நடக்கிறது என்று தெரியாமல் தூக்கத்தில் எழுந்து உளரும் ஆர்.பி.உதயகுமார்.. வச்சு செய்யும் அமைச்சர் KKSSR..!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஏதுவாக, பேபி அணைக்குகீழ் இருக்கும் 15 மரங்களை வெட்ட கேரள வனத் துறை அனுமதி வழங்கியதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், பினராயி விஜயனோ மரங்களை வெட்ட, தான் அனுமதி தரவில்லை என முகத்தில் அடித்ததுபோல பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதையும் படிங்க;- எம்எல்ஏ வீட்டுக்கே இந்த கதியா? வேளச்சேரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட அசன் மவுலானா..!

அப்படியெனில், எதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல்வர் நன்றி சொன்னார் என்று தெரியவில்லை. அவருடைய செயல்பாடுகள் வடிவேலு காமெடி போல் இருக்கிறது. எட்டு கோடி தமிழக மக்களின் சார்பில்தான் முதல்வர் கடிதம் எழுதினார். இப்போது அவருடைய செயலால் ஒட்டுமொத்த தமிழகமும் அவமானப்பட்டிருக்கிறது. தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்” ஆவேசமாகப் பேசினார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக மக்களுக்கு திமுக அரசு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டது.


முல்லைப் பெரியாறு அணையின் ஷட்டரை ஒவ்வொரு முறையும்  திறக்கும்போது தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தமிழக மற்றும் கேரள அமைச்சர்கள் இருப்பதுதான் வழக்கம். அப்படியிருக்கும்போது கேரளாவை சேர்ந்த அமைச்சர்கள் அணையைத் திறந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் உரிமை தமிழகத்திடம்தான் இருக்கிறது. அந்த அணையை திறக்க தமிழகத்துக்கு மட்டும்தான் உரிமை உள்ளது. முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை கேரள அரசிடம் மண்டியிட்டு வழங்கி முதல்வர் ஸ்டாலின் சரணடைந்துவிட்டார். இதனால், தமிழக அரசு 5 மாவட்ட விவசாயிகளிடமும் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

click me!