பாஜக தேசிய தலைமை அலுவலகம் அருகே அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு.. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.!

Published : Apr 02, 2022, 05:25 PM ISTUpdated : Apr 02, 2022, 09:15 PM IST
 பாஜக தேசிய தலைமை அலுவலகம் அருகே அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு.. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.!

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில், 2013- ஆம் ஆண்டே தி.மு.க.விற்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 

டெல்லியில் தீன்தயாள் உபாத்யாயா மார்க்கில் கட்டுப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.

டெல்லி திமுக அலுவலகம்

நாடாளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில், 2013- ஆம் ஆண்டே தி.மு.க.விற்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் டிசம்பரில் கட்டி முடிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைமை அலுவலகம் உள்ள இடத்தின் அருகே திமுகவின் 'அண்ணா- கலைஞர்' அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அறிவாலயத்தின் தோற்றத்தில், இந்த  'அண்ணா- கலைஞர்' அறிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக அலுவலகம் திறப்பு

சுமார் 11,000 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 'அண்ணா- கலைஞர்' அறிவாலயத்திற்கு வெளியே 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.  நுழைவு வாயிலில் அண்ணா, கலைஞரின் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. முதல் தளத்தில் கட்சிப் பணிகளை மேற்கொள்ள அலுவலகங்கள், 11 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 2வது தளத்தில் கட்சியின் ஒட்டுமொத்த வேலைகளை மேற்கொள்வதற்காக நவீன வசதியுடன் தனித்தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. 3வது தளத்தில் கட்சியின் தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் தங்குவதற்கான பிரத்யேக அறைகள் உள்ளன.

பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இந்நிலையில், டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில், சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா ஆகியோர் குத்து விளக்கேற்றினர். மேலும், அகிலேஷ் யாதவ், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வைகோ, டி.ராஜா, திருமாவளவன், அமர் பட்நாயக் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். Karunanidhi-A life புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக்கொண்டார். அதேபோல்,  A Dravidian Journey புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி