இந்திய எல்லையில் சீனா அத்துமீறினால் ரஷ்யா பாதுகாப்புக்கு வராது.. இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா.

Published : Apr 02, 2022, 04:23 PM IST
இந்திய எல்லையில் சீனா அத்துமீறினால் ரஷ்யா பாதுகாப்புக்கு வராது.. இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா.

சுருக்கம்

சீனா இந்திய எல்லைக் கோட்டில் அத்துமீறினால் ஒருபோதும் ரஷ்யா இந்தியாவின் பாதுகாப்புக்காக ஓடி வராது, இந்தியாவும் அப்படி எதிர்பாக்க முடியாது , ஒருபோதும் இந்தியா ரஷ்யாவையும் நம்பி இருக்க முடியாது, ரஷ்யா மீது சீனா எந்த அளவிற்கு நெருக்கம் காட்டுகிறதோ அந்த அளவிற்கு அது இந்தியாவுக்கு சாதக குறைவாக அமையும்

இந்திய எல்லையில் சீனா அத்துமீறினால் ரஷ்யா பாதுகாப்புக்கு வராது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க  துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலிப் சிங் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுடன் சீனா அதிக நட்பு பாராட்டி வருகிறது என்றும் இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டால் சீனாவின் ஜூனியர் பார்ட்னராக ரஷ்யா செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா சீனா இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ராணுவ சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஒட்டுமொத்த உக்ரைனும் சிதைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். தொடர்ந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஒட்டுமொத்த உக்ரேனும் நிலைகுலைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. ஐநா மன்றமும் ரஷ்யா உடனே போரை நிறுத்த வேண்டும் என கூறியதுடன் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அதை இந்தியா புறக்கணித்ததுடன், அதில் நடுநிலைமை வகிப்பதாக தெரிவித்தது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மக்களுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் இருந்து வரும் நிலையில், இந்தியா மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இந்த விஷயத்தில் அமெரிக்கா இந்தியா மீது  கொந்தளிப்பில் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் பெறுவதை தவறு என்று சொல்ல மாட்டோம் என கூறி இந்தியாவிடம் நிதானத்தை காட்டிவருகிறது அமெரிக்கா. இந்நிலையில்தான் அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், பிடன் நிர்வாகத்தில் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராகவும் இருந்து வரும் தலிப் சிங்  இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

46 வயதான இவர் பிடன்  நிர்வாகத்தில் பொருளாதார தடைகளின் புள்ளிவிவரம் என அமெரிக்கர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார். உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளி நாடுகளால் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் சிற்பியாகவும் இவர் கருதப்படுகிறார். கடந்த வியாழக்கிழமை அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ள அவர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர்,  சீனா இந்திய எல்லைக் கோட்டில் அத்துமீறினால் ஒருபோதும் ரஷ்யா இந்தியாவின் பாதுகாப்புக்காக ஓடி வராது, இந்தியாவும் அப்படி எதிர்பாக்க முடியாது , ஒருபோதும் இந்தியா ரஷ்யாவையும் நம்பி இருக்க முடியாது, ரஷ்யா மீது சீனா எந்த அளவிற்கு நெருக்கம் காட்டுகிறதோ அந்த அளவிற்கு அது இந்தியாவுக்கு சாதக குறைவாக அமையும். 

சீனா இந்தியா எல்லையில் அத்துமீறினால் ரஷ்யா பாதுகாப்புக்கு ஓடிவரும் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள், எங்கள் பொருளாதார தடைகள் மற்றும் எங்களுடன் இணைவதன் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகவே இந்தியா வந்துள்ளேன் இவ்வாறு அவர் கூறினார். அதாவது ரஷ்யாவையும் நம்ப வேண்டாம் என்றும், இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ரஷ்யா உதவிக்கு வராது என்றும், அதனால் அமெரிக்காவுடன் இணைந்திருப்பது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்பதையும் அவர்  மறைமுகமாக எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!
அமைச்சரின் இலாகா தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை..! ஊராட்சி செயலாளர் பணியில் மோசடி இல்லை..! அடித்துச் சொல்லும் அதிகாரிகள்..!