CMSatlin : மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை… மத்திய அமைச்சரிடம் போனில் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்!!

Published : Dec 20, 2021, 11:10 AM ISTUpdated : Dec 20, 2021, 11:36 AM IST
CMSatlin : மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை… மத்திய அமைச்சரிடம் போனில் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்!!

சுருக்கம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், 6 விசைப் படகுகளை சிறைபிடித்து அதிலிருந்து 43 பேரை கைது செய்தனர். தற்போது 43 மீனவர்களும் காங்கேசன்துறை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து ராமேஸ்வரத்தில் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில், விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தத்தால் 1 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து 2 படகுகளும் பறிமுதல் செய்துள்ளது.

இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 12 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது. தமிழக மீனவர்வகளை இலங்கை கடற்படை கைதை தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சி  தலைவர்கள் பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரியும் மீனவர்கள் கிராமங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மீனவர்கள், 8 படகுகளை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!