Amma Unavagam: ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதீங்க.. ஸ்டாலினின் வெளிவேஷம் அம்பலம்.. போட்டு தாக்கும் டிடிவி..!

Published : Jan 07, 2022, 07:09 AM IST
Amma Unavagam: ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதீங்க.. ஸ்டாலினின் வெளிவேஷம் அம்பலம்.. போட்டு தாக்கும் டிடிவி..!

சுருக்கம்

அம்மா உணவகங்களை மூடினால் என்ன?’ என்று சட்டப்பேரவையிலேயே தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பேசியிருப்பது அக்கட்சியின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. 

அம்மா உணவகங்களை மூடினால் என்ன? என்று சட்டப்பேரவையிலேயே தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பேசியிருப்பது அக்கட்சியின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- அம்மா உணவக பணி ஆட்கள் குறைக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் பொருட்களும் குறைவாக வழங்கப்படுகிறது என குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதற்கு பதிலளித்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு;- அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை. 1,700 ரூபாய் விற்பனையாகும் இடத்தில், 30 பேர் வேலை செய்கின்றனர்; 9,000 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது. எனவே, சுழற்சி முறையில் பணி வழங்குகிறோம். பணியாளர்களை குறைக்கவில்லை. உங்கள் ஆட்சியில் நடந்தது போல நடக்கிறது என்றார்.  

உடனே குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகன்;- அம்மா உணவகத்தை மூடினால் என்ன ? கலைஞர் பெயர் உள்ள எத்தனை திட்டங்களை மூடி உள்ளீர்கள் நீங்கள்  என கேள்வி எழுப்பினார். இந்நிலையில், அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அம்மா உணவகங்களை மூடினால் என்ன?’ என்று சட்டப்பேரவையிலேயே தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பேசியிருப்பது அக்கட்சியின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. 

இதன்மூலம், ‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் முன்பு கூறியிருந்தது வெறும் வெளிவேஷம் என்பது அம்பலமாகியிருக்கிறது. வழிவழியாக வரும் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளின் தொடர்ச்சிதான் அமைச்சரின் இந்தப் பேச்சு.

 

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீதான அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என தி.மு.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!