கெஞ்சி கேட்கிறேன்... உங்க ஒத்துழைப்பும் எங்களுக்கு வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 12, 2021, 7:15 PM IST
Highlights

கொரோனா இரண்டாவது அலையை நீங்கள் ஒருமாத காலத்திலேயே கட்டுப்படுத்திவிட்டீர்கள். இப்போது பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று குறுவை சாகுபடிக்காக 18வது முறையாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார். அதுமட்டுமின்றி பாசன பகுதிகளில் நீர் நிலைகளைத் தூர்வாரி சீரமைக்கின்ற பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கொரோனா இரண்டாவது அலையை நீங்கள் ஒருமாத காலத்திலேயே கட்டுப்படுத்திவிட்டீர்கள். இப்போது பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: கொரோனாவை பொறுத்தவரைக்கும் இப்போது நிலைமை ஓரகாவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் இருக்கிறது. இல்லை என்று மறுக்கவில்லை. அதையும் படிப்படியாக குறைப்பதற்கான முயற்சிகளில் இந்த அரசு முழுமையாக ஈடுபட்டு இருக்கிறது. தினசரி தொற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது 36 ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. அது 60 ஆயிரத்தைத் தொடும் என்ற சூழ்நிலை இருந்தது அதனால் தான் நாங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டோம். இப்போது அது படிப்படியாகக் குறைந்து நேற்றைய தினம் 16 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்திருக்கிறது. குறிப்பாகச் சென்னையைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீர்கள் என்றால் 1.500 நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது 7,000ஆக இருந்தது இப்போது அது 1,000 ஆகி இருக்கிறது. அதேபோல கோவையைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க ஆட்சிக்கு வந்த போது 5,000-த்தை தொட்டுக் கொண்டு இருந்தது. 

இப்போது அங்கே 2,000ஆக ஆகியிருக்கிறது. சேலத்தில் இருந்தது. இப்போ 900 ஆகி இருக்கிறது அதுமட்டுமல்ல, படுக்கைத் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, இது எல்லாம் இருந்துகொண்டு இருந்தது. அதை எல்லாம் இன்றைக்கு பிரச்சினை இல்லாத சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். போதுமான அளவிற்குப் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறோம் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம். சென்னையில் கொகேட்டகளை மையம் (War Room) உருவாக்கி இருக்கிறோம். அதில் இப்போது அதிகபட்சமாக பார்த்தீர்கள் என்றால் மே 20-ஆம் தேதி அன்று மட்டும் அந்தக் கட்டளை மையத்திற்கு 4768 அழைப்புகள் வந்தது ஆனால் இன்றைய நிலவரம் 200 முதல் 300) அழைப்புகள்தான். அந்த அளவிற்குக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். இன்னும் படிப்படியாகக் குறைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது நிச்சயமாக குறைப்போம். 

தடுப்பூசிகளைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் வேண்டும் என்று ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு இருக்கிறோம். மக்களுடைய வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு சில தளர்வுகளை அறிவித்திருக்கிறோம். அந்தத் தளர்வுகளைப் பொதுமக்கள் மெத்தனமாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியப்படுத்தாமல், ஒத்துழைப்பைத் தரவேண்டும் அவசியம் இல்லாமல் அவசரம் இல்லாமல் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதைக் குறைக்க வேண்டும். முகக்கவசத்தை அணிய வேண்டும், அரசு என்னென்ன வழிமுறைகளை எல்லாம் சொல்லியிருக்கிறதோ அதை எல்லாம் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் உங்கள் மூலமாக நாள் வலியுறத்தி வற்புறுத்தி இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் பொதுமக்களைக் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தீர்கள் என்றால் நிச்சயமாக முழுமையாகக் கட்டுப்படுத்தி விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது  என பதிலளித்தார். 

click me!