தில்லு இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வாங்க... பாஜகவை அலறவிட்டு குழப்பும் முதல்வர் கமல்நாத்..!

By vinoth kumarFirst Published Mar 16, 2020, 5:18 PM IST
Highlights

முதல்வர் கமல்நாத் செய்தியாளர்களை சந்திக்கையில் எங்களுக்கு மெஜாரிட்டி இல்லை எனக் கூறும் பாஜகவுக்கு தைரியம் இருந்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றார். கொரோனா வைரஸ் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து பாஜக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால், மத்திய பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தில்லு இருந்தால் எங்கள் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அதிரடியாக சவால் விடுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 10-ம் தேதி அதிருப்தியின் காரணமாக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் உரையாற்றிய பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பி வலியுறுத்தி வந்தனர். ஆனால்,  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சட்டப்பேரவை 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். 

இதனையடுத்து, முதல்வர் கமல்நாத் செய்தியாளர்களை சந்திக்கையில் எங்களுக்கு மெஜாரிட்டி இல்லை எனக் கூறும் பாஜகவுக்கு தைரியம் இருந்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றார். கொரோனா வைரஸ் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து பாஜக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால், மத்திய பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

click me!