"முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார்" - அப்போல்லோவில் சிங்கப்பூர் துணை பிரதமரின் ஆலோசகர் ஜோஸ்வா

Asianet News Tamil  
Published : Oct 24, 2016, 03:01 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
"முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார்" - அப்போல்லோவில் சிங்கப்பூர் துணை பிரதமரின் ஆலோசகர் ஜோஸ்வா

சுருக்கம்

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற சிங்கப்பூர் துணை பிரதமரின் ஆலோசகர் ஜோஸ்வா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டனைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு பீலே சிறப்பு சிகிச்சை அளித்தார். பின்னர் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினரும் முதலமைச்சருக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி அதிமுக பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அப்போலோ நிர்வாகமும் அவ்வப்போது அறிக்கையும் வெளியிட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய பல்வேறு கட்சி தலைவர்கள் அப்போலோவுக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சென்று பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா 95 சதவீதம் உடல் நலம் தேறி வருவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முக ரத்தினத்தின் ஆலோசகர் ஜோஸ்வா இன்று சென்னை வந்தார். 

பின்னர் ஜோஷ்வா, அப்போலோ மருத்துவமனை சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஜோஸ்வா, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று வருவதாக மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்ததாக கூறினார். அரசின் சார்பாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரிக்க வந்ததாகவும் ஜோஸ்வா கூறினார்.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!