
ஒகி புயலால் உருக்குலைந்து கிடக்கும் கன்னியாமரிக்கு சென்று சேதங்களை ஆதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸடாலின், முதலமைச்சருக்கு கன்னியாகுமரியை விட ஆர்.கே.நகர் ஆக்கியமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி அருகே உருவான ஒகி புயலால் அம்மாவட்டம் முழுவதும உருக்குலைந்துபோனது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒகி புயலால் காணாமல் போயுள்ளனர்.
புயலின் கோர தாண்டவத்தால் சின்னாபின்னமாகிக் கிடக்கும் குமரி மாவட்டத்தை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்கவும், சீரமைப்புபு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கக் கோரி குமரி மாவட்ட மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ இது குறித்து எந்த கவலையும் இல்லாமல் இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,. மீனவர்களை மீட்க வேண்டி மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இச்செயல்பாடுகளில் இருந்தே அவர் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்ளலாம் என்றும், எடப்பாடி பழனிசாமி உடனடியாக கன்னியாகுமரி சென்று போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.