அமித் ஷாவுக்கு கொரோனா... விரைந்து குணமடைய எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..!

Published : Aug 02, 2020, 08:18 PM IST
அமித் ஷாவுக்கு கொரோனா... விரைந்து குணமடைய எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..!

சுருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விரைவாக குணமடைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் அவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடந்தது. அந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதை ட்விட்டரில் அமித் ஷா  தெரிவித்தார். மேலும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ட்விட்டரில் அமித் ஷா தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தலைவர்கள் பலர் அமித் ஷா விரைவாக குணமடைய வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷா விரைவில் நலம்பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் நல்ல உடல் நலனுக்காக தமிழ் நாட்டிலிருந்து வாழ்த்துவதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி