மோடி வழியை பின்பற்றிய எடப்பாடி..! சமூக விலகலுக்கு சூப்பர் முன்னுதாரணம்..!

By Manikandan S R SFirst Published Mar 26, 2020, 3:37 PM IST
Highlights

கூட்டத்தில் பங்கேற்று இருந்த முதல்வர் உட்பட அனைவரும் மாஸ்க் அணிந்து இருந்தனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக அனைவரும் சற்று இடைவெளிவிட்டும் அமர்ந்திருந்தனர் . சமூக விலகலை கடைபிடிக்குமாறு அரசு மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கும் நிலையில் அதற்கு முன்னுதாரணமாக முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா  பாதிப்பு இந்தியாவிலும் தனது கொடூரத்தை தொடங்கியுள்ளது. இதுவரையில் 649 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 பேரும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து இருக்கின்றனர். 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 26 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று மாவட்ட ஆட்சித் தலைவருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி உதயகுமார், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்று இருந்த முதல்வர் உட்பட அனைவரும் மாஸ்க் அணிந்து இருந்தனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக அனைவரும் சற்று இடைவெளிவிட்டும் அமர்ந்திருந்தனர் . சமூக விலகலை கடைபிடிக்குமாறு அரசு மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கும் நிலையில் அதற்கு முன்னுதாரணமாக முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தில் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் தனித்தனியாக அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!